Thursday, August 18, 2022

நல்லவர்- தீயவர் நட்பு

 

மலர்: 021

ஸத் சங்கத்தின் நன்மையும் ,மூடர்களின் நட்பினால் ஏற்படும் தீமையும் கவிகள் பல படியாக பாடியுள்ளனர் .மணவாள  மாமுனிகள் தம்முடைய உபதேச ரத்னமாலையில் இரண்டு அற்புதமான பாசுரங்களை அருளியுள்ளார் . அப்பாசுரங்களையும், மற்று ஒத்த கருத்து பாடல்களையும் பார்ப்போம்.

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறத்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரிலார் நட்பு. -
நாலடியார் 

மிகவும் வெண்மையான அருவிகளைக் கொண்ட மலை நாட்டு வேந்தனே! உயர்ந்தோர் நட்பு மேலான சிறப்புடையதாய் மழைபோலும் சிறந்த பயனுள்ளதாகும். நற்குணமில்லாதார் நட்பு மிகுந்தால், மழை பெய்யாமல் வறண்ட காலத்தை ஒக்கும். (மழை இல்லாததால் வளம் குறைதலோடு வெயிலும் சுட்டெரிப்பது போல, கூடா நட்பால் நன்மையின்றித் தீமை நேரும் என்பது கருத்து).

गुणायन्ते दोषाः सुजन वदने दुर्जन मुखे
गुणाः दोष्यन्ते तदिदमपि नो विस्मयपदम् |
महामेघः क्षारं पिवति कुरुते वारि मधुरं
फ़ेणी क्षीरं पीत्वा वमति गरलं दु:सहतरम् ||

Gunayante doshah sujan vadane durjan mukhe.
Gunah doshaayante tadidmapi no vismaya padam.
Maha meghahksharam pivati, kurute wari madhuram.
Phani ksheeram peetwaa wamati garalam dussah taram

Noble people amplify even the little good they see in people. While, wicked people who always like to pick up only fault in others would overlook all the good in others. So much to an extent, that they will portray even the good as negative trait in others; it is similar to how clouds absorb salt and dirt from the ocean to give sweet drops of water. While a snake drink milk only to spit out venom.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.-Thirukkural 104

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.- Thirukkural 202


நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் உண்டாம் நலம் அது போல் – நல்ல
குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு . 69

அனுகூலர்களுடன் பழகுவதால் ஏற்படும் நன்மையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார். நல்ல மணத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் அந்த நல்ல மணத்தைத் தானும் பெறுவதைப்போலே ஸத்வ குணம் கொண்டவர்களுடன் கூடியிருந்தால்அந்தச் சேர்க்கையினாலேயே நல்ல குணமானது ஏற்படும்.

தீய கந்தம் உள்ளதொன்றைச் சேர்ந்து இருப்பதொன்றுக்குத்

தீய கந்தம் ஏறும் திறம் அது போல் – தீய

குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்

குணம் அதுவேயாம் செறிவு கொண்டு .70

 விட வேண்டியவர்களான ப்ரதிகூலர்களுடன் ஏற்படும் தீமையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார்.

துர்நாற்றத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் அந்த துர்நாற்றத்தைத் தானும் பெறுவதைப்போலே ரஜோ தமோ குணம் கொண்டவர்களுடன் கூடியிருந்தால்அந்தச் சேர்க்கையினாலேயே தீய குணமானது ஏற்படும்.

இந்த தலைப்பைப்பற்றி  பல பாடல்கள் உள்ளன . இடம் கருதி சிலவற்றை மட்டும் பார்த்தோம்.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.