Saturday, June 18, 2022

பாற்கடலை கடைதல்-समुद्रमन्थन- churning of the ocean'

  மலர்: 020



घृतमिव पयसि निगूढं भूते भूते वसति विज्ञानम्

विज्ञानम् सततं मनसि मन्थयितव्यं मनो मन्थानभूतेन Amrita bindu upanisad

Grutamiva payasi nigootam bhoote bhoote cha vasati vigyaanam I

Vigyaanam satatam mansi manthayitavyam mano manthaana bhootena II

Like the butter hidden in milk, Pure Consciousness resides in every being. That must be brought out by constant churning by the churning rod of the mind.

சமுத்திர மதனம் என்பது கூர்ம புராணம் மற்றும் பல புராணங்களில் சொல்லப்பட்ட ஒரு விஷயமாகும். இதைப்பற்றி கூறும் ஒரு மேலைநாட்டு அறிஞர் இந்த 

உருவகத்தை கண்டு அறிந்தவர் ஒரு அதிமேதாவியாக  இருக்கவேண்டும் என்று உரைக்கிறார் . இதில் இந்த உலகம் உண்டானதற்கு  விக்ஞான பூர்வமான விளக்கங்கள் அடங்கி இருப்பதாக அவர் எடுத்து உரைக்கிறார். இன்னும் பலகோணங்களில் இதன் உட்பொருளை விளக்குகின்றனர். 

சமுத்திரம் - நம்முடைய சரீரம் 

மேருமலை - முதுகுத்தண்டு  (இதன்  மூலம் தான்எல்லா சாதனமும் நடை பெறுகிறது)

கூர்மம் - ஆமை இது சாதகன் தன்னுடைய இந்திரியங்களை அடக்குவதை குறிக்கும் 

வாசுகி-  பாம்பு, குண்டலினி சக்தியை குறிக்கும்.இதனால் சமுத்திரத்தை கடைவது குண்டலினியை எழுப்புவதற்கு சமம்.

மன்தன்- கடைதல். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து செய்யும் ஒரு நிகழ்ச்சி . நன்மைக்கும் தீமைக்கும் இடையே ஆன ஒரு போட்டி.

ஹாலாஹலம்- விஷம் இது சாதக தசையில் ஏற்படும் கஷ்டங்களை குறிக்கும்.

மேலும் பதினான்கு விதமான ரத்னங்கள் தோன்றின. .இவைகளில் யோகத்தின்  பஞ்ச தத்வங்களும், குண்டலினி ஏழு சக்ரங்களும், லட்சுமி- எல்லா நன்மைகளையும் குறிக்கும் விதமாக அமையும் .

Here is a famous chant describing the 14 Ratnas from the Churning of the Milky Ocean.
लक्ष्मीः कौस्तुभपारिजातकसुराधन्वन्तरिश्चन्द्रमाः। 
गावः कामदुहा सुरेश्वरगजो रम्भादिदेवाङ्गनाः। 
अश्वः सप्तमुखो विषं हरिधनुः शङ्खोमृतं चाम्बुधेः।
रत्नानीह चतुर्दश प्रतिदिनं कुर्यात्सदा मङ्गलम्।
 

கடைசீயாக

 அம்ரித் - அமிருதம்- சாதகன்மோக்ஷத்தைஅடைவதையும் , பிறவிப்பெருங்கடலை தாண்டுவதையும் குறிக்கும்.


இப்போது சமுத்திரம் கடைதல் உருவகத்தை வைத்து பிள்ளை பெருமாள் அய்யங்கார்,திருவரங்கன் கலம்பகத்தில்  நம்மாழ்வார் துதியாக, எழுதிய பாடலை பார்ப்போம்.

நம்மாழ்வார் துதி:
மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –

நம்மாழ்வார் Super consciousness-ன் ப்ரதீகம்  என்றால் மிகை ஆகாது )

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.



Sunday, June 12, 2022

முக்குறும்பு அறுத்த மாமனிதர்

  மலர்: 019


 எம்பெருமானார், ஆழ்வான், முதலியாண்டான் & ஸ்வாமி ஆளவந்தார்

विध्या मदो  धन मदो  तृतीयो अभिजनो मदः I
मदा एते अवलिप्तानां एत एव सतां दमः II

Vidhyaa mado dhana mado triteeyo abhijano madah I

Madaa ete avaliptaanam ete eva sataam damah II

(मदः- Pride; दमः-Self-control)


கல்வி, செல்வம், நற்குலப்பிறப்பு இவைகள் தீயவர்களிடம் பிறரை துன்புறுத்தவும் ,செறுக்கை அதிகரிக்கவும் பயன்படுகிறது . அதே சமயம் நல்லோர்களிடத்து இந்திரிய நிக்கிரஹத்துக்கும், பிற நன்மைகளை செய்வதற்கும் ஹேதுவாகிறது.

ஸ்ரீவைஷ்ணவ    குருபரம்பரையில்     மிக  உன்னத   இடத்தை
அலங்கரித்திருப்பவர்   ஸ்ரீவத்ஸாங்க  மிச்ரர்   என்னும்  கூரத்து  ஆழ்வான்.எம்பெருமானார்க்கே    அற்றுத்  தீர்ந்த     பக்தி மிக்கவர்    கூரேசர். கூரத்தாழ்வானின் பிறப்பிடம் காஞ்சிபுரத்து அருகே கூரம் என்ற சிறிய கிராமம்(கி.பி 1010).
கூரத்தாழ்வான் திருநட்சத்திரம்- தை, ஹஸ்தம்வரதராஜ ஸ்தவம் சுந்தர பாஹுஸ்தவம் அதிமானுஷஸ்ஸ்தவம் ஸ்ரீவைகுண்டஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம் என்ற பஞ்ச ஸ்தவங்களை இயற்றியவர்.
கூரத்தாழ்வான் முக்குறும்பு என்று சொல்லக் கூடிய மூன்று செருக்குகளை, கல்வி செருக்கு, செல்வ செருக்கு, குல செருக்கு, வென்றிருப்பதாக திருவரங்கத்தமுதனார் புகழ் பாடுகிறார்.

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே.

கூரத்தாழ்வானின் புகழை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மொழியின் எல்லைகளை கடந்தது அவன் புகழ்.
வஞ்சகமான மூன்று கொடிய குணங்களில் இருந்து கடக்க அவன் நாமமே சரண்.
நாம் சேர்த்து வைத்த பழியையை கடத்த இராமானுஜனின் புகழ் அல்லால் வேறு ஒன்றும்  இல்லை.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

Wednesday, June 8, 2022

ஒன்பது நற்பண்புகள்

 மலர்: 018



ஞானமே முக்திக்கு ஒரு சிறந்த சாதனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது . தன்னை பண்படுத்துவதாலேயே ஞானம் வளர்கிறது.அந்த ஞானத்தை அடைய ஒன்பது நற்பண்புகளை முதற்கண் பகவத்கீதையில் எடுத்து உரைக்கிறார். முக்திக்கு மட்டுமன்றி தினசரி வாழ்க்கைக்கும் அவைகள் மிகவும் நன்மை பயக்கும் .
अमानित्वमदम्भित्वमहिंसा क्षान्तिरार्जवम् |
आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रह: ||BG13.8||
amānitvam adambhitvam ahinsā kṣhāntir ārjavam I
āchāryopāsanaṁ śhauchaṁ sthairyam ātma-vinigrahaḥ II
Humbleness; freedom from hypocrisy; non-violence; forgiveness; simplicity; service of the Guru; cleanliness of body and mind; steadfastness; and self-control; dispassion toward the objects of the senses.
தற்பெருமையின்மை,  தருக்கின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி, தன்னடக்கம்.
1.அமானித்வம்- மற்றவர்களைவிட தன்னை உயர்ந்தவனாக நினையாதிருத்தல்.
2.அதம்பித்வம் - தற்பெருமையின்மை 
3. அஹிம்சை- பிறர்களுக்கு தீங்குசெய்யாதிருத்தல் 
4.க்ஷாந்தி  - துன்பம் வரும்போது அதைப்பொருத்தல் 
5.ஆர்ஜவம் -உள்ளொன்றுவைத்து புறம் ஒன்று பேசாதிருத்தல் 
6.ஆசார்ய உபாசனை- குருவுக்கு பணிவிடை செய்தல்  
7.சௌசம்-உள்ளத்தையும்,உடலையும்தூய்மையாக        வைத்துக்கொள்ளுதல் 
8.ஸ்தைர்யம்- ஆத்ம சாதனத்தில் விட முயற்சி 
9. ஆத்மவினிகிரஹ: -  உடலும் இந்திரியங்களும் வெளி விஷயங்களில் செல்லாதிருத்தல் .

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:422)

பொழிப்பு (மு வரதராசன்): மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.