மலர்: 020
घृतमिव पयसि निगूढं भूते भूते च वसति विज्ञानम् ।
विज्ञानम् सततं मनसि मन्थयितव्यं मनो मन्थानभूतेन ॥ Amrita bindu upanisad
Grutamiva payasi nigootam bhoote bhoote
cha vasati vigyaanam I
Vigyaanam satatam mansi manthayitavyam mano
manthaana bhootena II
Like the butter hidden in milk, Pure Consciousness resides in
every being. That must be brought out by constant churning by the churning rod
of the mind.
சமுத்திர மதனம் என்பது கூர்ம புராணம் மற்றும் பல புராணங்களில் சொல்லப்பட்ட ஒரு விஷயமாகும். இதைப்பற்றி கூறும் ஒரு மேலைநாட்டு அறிஞர் இந்த
உருவகத்தை கண்டு அறிந்தவர் ஒரு அதிமேதாவியாக இருக்கவேண்டும் என்று உரைக்கிறார் . இதில் இந்த உலகம் உண்டானதற்கு விக்ஞான பூர்வமான விளக்கங்கள் அடங்கி இருப்பதாக அவர் எடுத்து உரைக்கிறார். இன்னும் பலகோணங்களில் இதன் உட்பொருளை விளக்குகின்றனர்.
சமுத்திரம் - நம்முடைய சரீரம்
மேருமலை - முதுகுத்தண்டு (இதன் மூலம் தான்எல்லா சாதனமும் நடை பெறுகிறது)
கூர்மம் - ஆமை இது சாதகன் தன்னுடைய இந்திரியங்களை அடக்குவதை குறிக்கும்
வாசுகி- பாம்பு, குண்டலினி சக்தியை குறிக்கும்.இதனால் சமுத்திரத்தை கடைவது குண்டலினியை எழுப்புவதற்கு சமம்.
மன்தன்- கடைதல். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து செய்யும் ஒரு நிகழ்ச்சி . நன்மைக்கும் தீமைக்கும் இடையே ஆன ஒரு போட்டி.
ஹாலாஹலம்- விஷம் இது சாதக தசையில் ஏற்படும் கஷ்டங்களை குறிக்கும்.
மேலும் பதினான்கு விதமான ரத்னங்கள் தோன்றின. .இவைகளில் யோகத்தின் பஞ்ச தத்வங்களும், குண்டலினி ஏழு சக்ரங்களும், லட்சுமி- எல்லா நன்மைகளையும் குறிக்கும் விதமாக அமையும் .
Here is a famous chant describing the 14 Ratnas from the Churning of the
Milky Ocean.
लक्ष्मीः कौस्तुभपारिजातकसुराधन्वन्तरिश्चन्द्रमाः।
गावः कामदुहा सुरेश्वरगजो रम्भादिदेवाङ्गनाः।
अश्वः सप्तमुखो विषं हरिधनुः शङ्खोमृतं चाम्बुधेः।
रत्नानीह चतुर्दश प्रतिदिनं कुर्यात्सदा मङ्गलम्।
கடைசீயாக
அம்ரித் - அமிருதம்- சாதகன்மோக்ஷத்தைஅடைவதையும் , பிறவிப்பெருங்கடலை தாண்டுவதையும் குறிக்கும்.
இப்போது சமுத்திரம் கடைதல் உருவகத்தை வைத்து பிள்ளை பெருமாள் அய்யங்கார்,திருவரங்கன் கலம்பகத்தில் நம்மாழ்வார் துதியாக, எழுதிய பாடலை பார்ப்போம்.
நம்மாழ்வார் துதி:
மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –
( நம்மாழ்வார் Super consciousness-ன் ப்ரதீகம் என்றால் மிகை ஆகாது )
கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

No comments:
Post a Comment