Tuesday, March 28, 2023

அகப்பட்டேன் வாசுதேவன் வலையினுள்ளே

  மலர்: 044










"रामः कमलपत्राक्षः सर्वसत्त्व मनोहरः।"

This is the description of Rama given out by Hanuman in his response to Sita.

यथा कप्यासं पुंडरीक मेव अक्षिणी"
That Purusha is described as "कमलपत्राक्षः
"
That is the description of the "Purusha "in "Chandogyopanishad".

திருவாய்மொழி ஈடு வ்யாக்யானத்தில் ஒரு அழகான ஐதிஹ்யம் சொல்லப்பட்டிருக்கிறதுதிருவரங்க பெருமாள் அரையர் "அகப்பட்டேன் வாசுதேவன் வலையுள்என்ற பாசுரத்திற்கு அபிநயம் பிடிக்கும்போது மீன் பிடிக்கும் வலையை காண்பித்தார்இதைப்பார்த்த ராமானுஜர் வலை என்பதை பெருமாளுடைய கண்களை குறிப்பதாக சைகை செய்து விளக்கினார்இந்த அற்புதமான பாசுரத்தை காண்போம்.

அன்னைஎன் செய்யில்என்? ஊர்என் சொல்லில்என்? தோழிமீர்!
என்னைஇனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.
திருவாய்மொழி 5-3-6

தோழியர்களே! முற்பட்டவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனும் வளம் பொருந்திய துவாரகை என்னும் திவ்விய தேசத்திற்கு அரசனும் மணிவண்ணனுமான வாசுதேவனுடைய வலைக்குள்ளே அகப்பட்டேன்: ஆதலால், இனி, தாயானவள் எந்தக் காரியத்தைச் செய்தால் என்ன? ஊரிலுள்ள மக்கள் எந்தப் பழிச் சொற்களைக் கூறினால் என்ன? என் பக்கல் உங்களுக்கு ஆசை வேண்டாம் என்கிறாள்.

ஆண்டாளும் நாச்சியார்மொழி பாசுரத்தில் எம்பெருமானுடைய கண்கள் தன்னை ஈர்ப்பதை வெளிப்படுத்துகிறாள் .

கார்த்தண் கமலக்கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின்குப்பாயப் புகர்மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே

காளமேகத்திலே குளிர்ந்த தாமாரை மலர் பூத்தாற்போன்றிருக்கும் திருக்கண்கள் என்கிற பெரிய கயிறைக் கொண்டு என்னை அகப்படுத்தி என் நெஞ்சையும் இழுத்துக் கொண்டுபோய் விளையாடும் ஸர்வேச்வரனான எம்பெருமானைப் பார்த்தீர்களா? போர்வையாகப் போர்த்திய முத்துச் சட்டையை உடையதாய் தேஜஸ்ஸை உடையதாய் பெரிய யானைக்குட்டிபோலே வேர்த்து நின்று விளையாட வ்ருந்தாவனத்தே கண்டோமே [வேர்வைத்துளிகளை ஒளிமிகுந்த முத்துக்களாக விளக்குகிறாள்.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


Friday, March 3, 2023

கண்ணன் எம்பெருமான் என்று என்றே....

  மலர்: 043

तमेव शरणं गच्छ सर्वभावेन भारत |
तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् ||BG18.62
||

tam eva śharaa gachchha sarva-bhāvena bhārata
tat-prasādāt parā
śhānti sthāna prāpsyasi śhāśhvatam

Surrender exclusively unto Him with your whole being, O Bharata! By His grace, you will attain perfect peace and the eternal abode.

"அர்ஜுனா! அந்த பரமாத்மாவான என்னையே எல்லாவகையாலும் சரணமடைவாய் . அவன் அருளால் எல்லா கர்மபந்தங்களில் இருந்தும் விடுதலையும் நிலையான பரம பதத்தையும் அடைவாய் ."

கண்ணன் எல்லாவகையாலும் தன்னை சரணடைவாய் என்று கூறியதின்பொருள் என்ன என்பதை நம்மாழ்வாரின் 
பாசுரத்தைக்கொண்டு அறியலாம்,

''உயிர் வாழ்வதற்கு உண்ணத்தக்க சோறும், உயிரைப் பாதுகாப்பதற்குப் பருகத்தக்க நீரும் இன்பத்துக்காக மகிழ்ந்து தின்னத்தக்க வெற்றிலையுமாகிய(தாரக, போஷக, போக்கிய) இப்பொருட்கள் எல்லாம் எனக்கு கண்ணபிரான் ஆகிய எம்பெருமானே'' என்கிறார்இந்த பாங்கினைத்தைத்தான் 'சர்வ பாவேந' என்று குறிப்பிடுகிறார் 

"உண்ணும் சோறு பருகு நீர் தின்னும்

 வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே

கண்கள் நீர் மல்கி
மண்ணின் உளவன் அவன் சீர் வளம்

மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இள மான் புகுமூர்

 திருக்கோளூரே" - திருவாய்மொழி 6-7-1

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


Thursday, March 2, 2023

தருதுயரம் தடாயேல்

 மலர்: 042

விற்றுவக்கோடு என்பது கேரள நாட்டில் உள்ள ஒரு அற்புதமான திவ்விய தேசம். குலசேகர ஆழ்வார் இந்த திவ்ய தேசத்துஎம் பெருமாளைப்பற்றி ஒரு பதிகம் அருளியுள்ளார் . அதில் நமக்கும் இறைவனுக்கும் உள்ள நவவித சம்பந்தத்தை பல அருமையான உவமைகளால் விவரிக்கிறார்.

தருதுயரம் தடாயேலுன்

சரணல்லால் சரணில்லை,

விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ்

விற்றுவக்கோட் டம்மானே,

அரிசினத்தா லீன்றதாய்

அகற்றிடினும், மற்றவள்தன்

அருள்நினைந்தே யழும்குழவி

அதுவேபோன் றிருந்தேனே. 1

'விற்றுவக்கோட்டு அம்மானே!உன்னைத் தஞ்சமாக வந்தடைந்தேன். நீயே என்னைக் காக்க வேண்டும்.  என் துன்பத்தை நீக்கா விட்டாலும்தாய் அடித்தாலும் மீண்டும் சென்று அவள் அன்பையே எதிர்பார்க்கும் குழந்தையைப் போல் தாயின் அருளையே நினைந்து அழும் குழந்தை போலவும், வேறு கதியின்றி இருக்கிறேன். ஆதலால், உன் சரணல்லால் சரணில்லை'என்று ஆழ்வார் அந்த எம்பெருமானைச்சரணடைகிறார்.குலசேகரஆழ்வார்தமது

முகுந்தமாலையிலும்

(मुकुन्दमाला) இதேபோல் ஒரு அழகான பாடலை அருளியுள்ளார் .

 दिवि वा भुवि वा ममास्तु वासो 
नरके वा नरकान्तक प्रकामम्  
अवधीरितशारदारविन्दौ 
चरणौ ते मरणेऽपि चिन्तयामि

divi vā bhuvi vā mamāstu vāsō
narakē vā narakāntaka prakāmam

avadhīrita śāradāravindau
charaṇau tē maraṇē'pi chintayāmi 6

O Lord, killer of the demon Naraka! Let me reside either in the realm of the demigods, in the world of human beings, or in hell, as You please. I pray only that even at the point of death I may remember Your two lotus feet, whose beauty defies that of the lotus growing in the Śarat season.

SRI KRISHNAYA THUBHYAM NAMAH