மலர்: 043
तमेव शरणं गच्छ सर्वभावेन भारत |
तत्प्रसादात्परां शान्तिं
स्थानं प्राप्स्यसि शाश्वतम् ||BG18.62||
tam eva śharaṇaṁ gachchha
sarva-bhāvena bhārata
tat-prasādāt parāṁ śhāntiṁ sthānaṁ prāpsyasi śhāśhvatam
Surrender exclusively unto Him with your whole being, O Bharata!
By His grace, you will attain perfect peace and the eternal abode.
"அர்ஜுனா! அந்த பரமாத்மாவான என்னையே எல்லாவகையாலும் சரணமடைவாய் . அவன் அருளால் எல்லா கர்மபந்தங்களில் இருந்தும் விடுதலையும் நிலையான பரம பதத்தையும் அடைவாய் ."
கண்ணன் எல்லாவகையாலும் தன்னை சரணடைவாய் என்று கூறியதின்பொருள் என்ன என்பதை நம்மாழ்வாரின்
பாசுரத்தைக்கொண்டு அறியலாம்,
''உயிர் வாழ்வதற்கு உண்ணத்தக்க சோறும், உயிரைப் பாதுகாப்பதற்குப் பருகத்தக்க நீரும் இன்பத்துக்காக மகிழ்ந்து தின்னத்தக்க வெற்றிலையுமாகிய(தாரக,
போஷக, போக்கிய) இப்பொருட்கள் எல்லாம் எனக்கு கண்ணபிரான் ஆகிய எம்பெருமானே'' என்கிறார்.
"உண்ணும் சோறு பருகு நீர் தின்னும்
வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே
கண்கள் நீர் மல்கி
மண்ணின் உளவன் அவன் சீர் வளம்
மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இள மான் புகுமூர்
திருக்கோளூரே" - திருவாய்மொழி 6-7-1
கண்ணன் எம்பெருமான் என்று என்றே
மண்ணின் உளவன் அவன் சீர் வளம்
திண்ணம் என் இள மான் புகுமூர்
No comments:
Post a Comment