மலர்: 044
"रामः कमलपत्राक्षः सर्वसत्त्व मनोहरः।"
This is the description of Rama given out by Hanuman in his
response to Sita.
यथा कप्यासं पुंडरीक मेव अक्षिणी"॥
That Purusha is described as "कमलपत्राक्षः"
That is the description of the "Purusha "in
"Chandogyopanishad".
That Purusha is described as "कमलपत्राक्षः"
That is the description of the "Purusha "in "Chandogyopanishad".
திருவாய்மொழி ஈடு வ்யாக்யானத்தில் ஒரு அழகான ஐதிஹ்யம் சொல்லப்பட்டிருக்கிறது. திருவரங்க பெருமாள் அரையர் "அகப்பட்டேன் வாசுதேவன் வலையுள்" என்ற பாசுரத்திற்கு அபிநயம் பிடிக்கும்போது மீன் பிடிக்கும் வலையை காண்பித்தார். இதைப்பார்த்த ராமானுஜர் வலை என்பதை பெருமாளுடைய கண்களை குறிப்பதாக சைகை செய்து விளக்கினார். இந்த அற்புதமான பாசுரத்தை காண்போம்.
என்னைஇனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.
தோழியர்களே! முற்பட்டவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனும் வளம் பொருந்திய துவாரகை என்னும் திவ்விய தேசத்திற்கு அரசனும் மணிவண்ணனுமான வாசுதேவனுடைய வலைக்குள்ளே அகப்பட்டேன்: ஆதலால், இனி, தாயானவள் எந்தக் காரியத்தைச் செய்தால் என்ன? ஊரிலுள்ள மக்கள் எந்தப் பழிச் சொற்களைக் கூறினால் என்ன? என் பக்கல் உங்களுக்கு ஆசை வேண்டாம் என்கிறாள்.
ஆண்டாளும் நாச்சியார்மொழி பாசுரத்தில் எம்பெருமானுடைய
கண்கள் தன்னை ஈர்ப்பதை வெளிப்படுத்துகிறாள் .
கார்த்தண் கமலக்கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின்குப்பாயப் புகர்மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
காளமேகத்திலே குளிர்ந்த தாமாரை
மலர்
பூத்தாற்போன்றிருக்கும் திருக்கண்கள் என்கிற
பெரிய
கயிறைக்
கொண்டு
என்னை
அகப்படுத்தி
என்
நெஞ்சையும்
இழுத்துக்
கொண்டுபோய்
விளையாடும்
ஸர்வேச்வரனான
எம்பெருமானைப் பார்த்தீர்களா? போர்வையாகப் போர்த்திய
முத்துச்
சட்டையை
உடையதாய்
தேஜஸ்ஸை
உடையதாய்
பெரிய
யானைக்குட்டிபோலே வேர்த்து நின்று விளையாட
வ்ருந்தாவனத்தே கண்டோமே [வேர்வைத்துளிகளை ஒளிமிகுந்த
முத்துக்களாக
விளக்குகிறாள்.
கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.
No comments:
Post a Comment