மலர்: 045
இறைவன் நம்மை அடைய செய்யும் முயற்சி பெரியதா அல்லது நாம் அவரை அடைய செய்யும் முயற்சி பெரியதா என்றால் இறைவனுடைய முயற்சியே பெரியது என்று ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் திண்ணமாக எடுத்து உரைக்கிறார்கள் . காளிதாசன் குமார சம்பவத்தில் தவம் செய்யும் பார்வதியை அணுகி சிவபெருமான் கூறுவதாக ஒரு அருமையான பாடல் உள்ளது.
दिवं यदि प्रार्थयसे वृथा श्रमः पितुः प्रदेशास्तव देवभूमयः।
अथोपयन्तारमलं समाधिना न रत्नमन्विष्यन्ति मृग्यते हि तत्॥
Divamyadipraarthayasevrthaasramah
Pituhpradesaahtavadevabhoomayah.
Athopayantaaramalamsamaadhinaa
Na ratnamanvishyatimrgyate hi tat.
If you desire heaven, then your efforts are in vain because you father’s place is as good as heaven. If your penance is for getting a prospective bridegroom, then enough of this vow. A gem is always sought after and does not go in search of a possessor.
அரசன் தான் ரத்னத்தை தேடிப்போவான் ,எங்காவது ரத்னம் அரசனை தேடி போனதுண்டோ?( இங்கு அரசன்- பரமாத்மா, ரத்னம்- ஜீவாத்மா )
நம்மாழ்வார் இதையே தம் பாடலில் வலியுறுத்துகிறார் :
வந்தருளிஎன் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத்தாய் தந்தையே! முழுஏழுலகும் உண்டாய்!
செந்தொ ழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கலநகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே. 5.7.7
உன் இருப்பிடங்களை விட்டு இங்கே வந்தருளி, உன் விஷயத்தில் விருப்பமற்றிருந்த என் நெஞ்சை இருப்பிடமாகக் கொண்டு என் இருப்பை நோக்கி பரமபதவாஸிகளின் இருப்பையும் வளர்ப்பவனாய் இவ்வுலகத்திற்கு தனித்துவம் வாய்ந்த முதன்மைத் தாயாய் தந்தையாய் எல்லா உலகங்களையும் அமுதுசெய்து திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தாய். வேறு எதிர்பார்ப்பு இல்லாத நேர்மையான செயல்களை உடையவர்களுடைய வைதிகமான பகவதாராதனம் மாறாமல் நடக்கும் சிரீவரமங்கலநகரிலே முடிவற்ற குணங்களையுடையவனே! அடியேனை நீ உன் விஷயத்தில் இருந்து அகற்றாமல் இருக்கவேண்டும்.
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே.
தன் குணங்களையும் செயல்களையும் காட்டி என்னை நீராக்கி குறை சிறிதும் இல்லாதபடி பருகினான் –
No comments:
Post a Comment