Wednesday, January 18, 2023

ஏலாப் பொய்கள் உரைப்பானை!

 மலர்: 040


மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
இங்கே போதக் கண்டீரே?* 
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை*  
விருந்தாவனத்தே கண்டோமே* - நாச்சியார் திருமொழி
பெண்களிடத்தில் உள்ள மோகமே ஒரு வடிவுகொண்டது போல் இருப்பவனும், ஸகல குணங்களாலும் பரிபூர்ணனும், எல்லோரும் ஆசைப்படத் தகுந்தவனும், பொருந்தாத பொய்களைக் கூசாது கூறுபவனுமான கண்ணன் இங்கே எழுந்தருளக் கண்ட துண்டோ என்று கேட்டதற்கு, மேலே வெய்யில் படாதபடி பெரிய திருவடி தன் சிறகை விரித்து நிழல் செய்ய, அதன் கீழ் விருந்தாவனத்திலே எம்பெருமான் எழுந்தருளக் கண்டோம் என்று விடையளிப்பர் .

The Lord is a lover, nay; love itself born as a bridegroom. Did you see the inept liar go this way?” “Under the wings of Garuda, like a canopy shielding him from the Sun, we saw him going in Brindavana.


ஏலாப் பொய்கள் உரைப்பானை- We have an excellent sloka in Sri Krishna karnamrutam describing Krishna's harmless lies when caught in the act of stealing butter.

कस्त्वम् बाल बलानुजः किम् इह ते मन्मन्दिराशङ्कया
युक्तम् तत् नवनीतपात्रविवरे हस्तम् किम् अर्थम् न्यसेः।
मातः कङ्चन वत्सकम् मृगयितुम् मा गा विषादम् क्षणाद्
इति एवम् वरवल्लवी प्रतिवचः कृष्णस्य पुष्णातु नः॥ २-८२

2-82. milkmaid: kas tvam bAla? Who are you, boy?

kriShNa:bala-anujaH: balarAma’s brother;milkmaid:

iha te kim = what it you are doing here – in my house

kriShNa : mat mandira Asha~NkayA= thought this as our house – and entered;

milkmaid: tat yuktam! navanIta pAtra vivare hastam kim artham nyaseH = its ok, what for you are digging hand in that butter pot;

kriShNaka~Ncana vatsakam mR^igayitum= searching for a missing calf; 

mA gA viShAdam mAtaH = don’t get upset my mother;

evam iti = in this way; kR^iShNasya= of kriShNa;

vara vallavI kShaNAt prati-vacaH= [iti evam vada vallavI prativachaH]= to best, cowwoman, in a trice, repartees shot back - he who shot back; naH puShNAtu = let those quick witted badinages invigorate all of us.

SRI KRISHNAYA THUBHYAM NAMAH

  


















Wednesday, January 4, 2023

கை ஆர் சக்கரத்து* என் கருமாணிக்கமே!

 மலர்: 039

वनमाली गदी शार्ङ्गी शङ्खी चक्री नन्दकी .
श्रीमान् नारायणो विष्णुर्वासुदेवोऽभिरक्षतु  I
"May LORD NARAYANA, Known as VISHNU, VASUDEVA wearing the garland Vanamala and wielding the mace, bow, conch, discus and sword, who is with Mahalakshmi protect us."


எம்பெருமான் உடைய நிர்ஹேதுக கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை ப்ரீதியாலே அருளிச் செய்தார் –
க்ருபயா பர்யபாலயத் -என்னுமா போலே-
வேஷம் போட்டாலும் கிருபை பண்ணுகிறான் என்று அருளும் திரு வாய் மொழி- 5.1.1
பொய்யாகவேனும் பக்தி செய்து   பாருங்கள்.நாளடைவில் அதுவே உண்மையாக  மாறிப் போகும். விரும்பாமல் சாப்பிட்டாலும் லட்டு இனிக்கத்தானே செய்கிறது
கை ஆர் சக்கரத்து
 என் கருமாணிக்கமே! என்று என்று,* 
பொய்யே கைம்மைசொல்லி*  
புறமே புறமே ஆடி.* 
மெய்யே பெற்றொழிந்தேன்,* 
 விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
ஐயோ கண்ணபிரான்!*  
அறையோ இனிப்போனாலே. 5.1.1

பொருள் 

கையார் = கையில்
சக்கரத்து = சக்கரத்தைக் கொண்ட
என் கரு மாணிக்கமே = என் கரு மாணிக்கமே
என்றென்று = என்று என்று
பொய்யே கைம்மை சொல்லிப்  = பொய்யாகச் சொல்லி
புறமே புறமே ஆடி = உலக விஷயங்களில் மூழ்கி  (இருந்தாலும்)
மெய்யே பெற்று ஒழிந்தேன் = உண்மையான உன்னை பெற்றேன்
விதிவாய்கு இன்று காப்பார் யார் = உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும்
ஐயோ = ஐயோ
கண்ணபிரான் = கண்ணபிரான்
அறையோ இனிப் போனாலே = நீ என்னை விட்டுப் போய் விடுவாயா ? (போகமாட்டாய், போக முடியாது )

Uttering, "Holder of bright discus!", "My gem-hued Lord!", and many such shallow praises, I roamed and danced, and attained the truth, who can prevent what fortune favours ? My Lord, Krishna, if you leave me now, will I let you go?

மணிவாசக பெருமானும் இதே போன்று அருளி செய்துள்ளார்

யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே
நான் உண்மையானவன் அல்ல. என் மனமும் சுத்தமானது அல்ல
என் அன்பு போலி அன்பு இருந்தாலும், உன்னை நினைத்து மனம் உருகி அழுதால் நான் உன்னை அடைய முடியும்,  அதற்கும் நீ தான் அருள் புரிய வேண்டும்" என்று உருகுகிறார் மணி வாசகர்

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.