Monday, February 20, 2023

நாராயணா வென்னா நாவென்ன நாவே

 மலர்: 041


नारायणायेति यस्यास्ते वर्तते नाम मङ्गलम् I
नारायणं तं अन्वास्ते वत्सं गौरिव वत्सला II
Naarayanaayeti yasyaaste vartate naama Mangalam I
Naaraayanam tam anvaaste vatsam gauriva vatsalaa II
எவனொருவனின் வாயில் எப்பொழுதும் "நாராயணா" எனும் திருநாமம் அனுசந்திக்கப்படுகின்றதோ! அப்படிப்பட்ட மங்களகரமான திருநாமத்தை அனுசந்திப்பவனை , அதிக பாசத்துடன் கன்றினை தொடரும் தாய்பசுவைப்போன்று பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயணன் பின் தொடருகிறான்.

புத்த மதத்தைச் சேர்ந்த இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் ஒரு அருமையான பாடலை அருளியுள்ளார். .

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே

மடந்தாழு நெஞ்சத்துக் = மடமையால் தாழ்ந்த நெஞ்சைக் கொண்ட
கஞ்சனார் = கம்சனின்
வஞ்சம் கடந்தானை = வஞ்சக திட்டங்களை முறியடித்து வந்தவனை
நூற்றுவர்பால் = கௌரவர்களிடம்
 
நாற்றிசையும் போற்றப் = நான்கு திசைகளும் போற்ற, நான்கு திசைகளில் உள்ளவர்களும் போற்ற
படர்ந்தா ரணமுழங்கப் = படர்ந்து + ஆரணம் + முழங்க = சென்று, வேதங்கள்  முழங்க
பஞ்சவர்க்குத்
தூது நடந்தானை = பஞ்ச பாண்டவர்களுக்கு தூது சென்றவனை
ஏத்தாத நாவென்ன நாவே = புகழாத நாக்கு என்ன நாக்கே
நாராயணா வென்னா நாவென்ன நாவே = நாராயணா என்று சொல்லாத நாக்கு என்ன நாக்கே.

திருமங்கை ஆழ்வாரும் பெரியதிருமொழியில் நாராயண நாமத்தின் பெருமையை கூறியுள்ளார் : 

மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.- Periya Thirumozhi

"நாராயணா " என்ற நாமமே நம் வல் வினைகளுக்கு எல்லாம் நஞ்சு போன்றது. வல் வினைகள் நம்மை அண்ட விடாது, அண்டிய வல் வினைகளை களைந்து அவற்றின் மூலம் வரும் துன்பங்களில் இருந்து நமக்கு விடுதலை தரும்.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.