Friday, August 23, 2019

கண்ணன் கழல்


மலர்: 001


ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்*
நாடுவார் நம்பிரான் எங்குத்தானென்பார்*
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று*
ஆடுவார்களும் ஆயிற்று ஆயர்பாடியே.

ஓடுவார் - கண்ணன் பிறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், ஆயர் குல ஆடவரும் பெண்டிரும் நந்தகோபருடைய மாளிகையை நோக்கி விரைந்து ஓடினர்;
விழுவார் - முதல் பாடலில் சொல்லியிருந்த வண்ணம், எண்ணெய் சுண்ணம் கலந்த கண்ணன் முற்றத்தில் இருக்கும் அளற்றில்(சேற்றில்) வழுக்கி விழுந்தனர்; ஆயினும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாது, விரைந்தெழுந்து கண்ணனை நோக்கி ஓடினர்;
உகந்தாலிப்பார் - பெரும் மகிழ்ச்சி ஆரவாரக் கூச்சல் போட்டு ஒருவரை ஒருவர் உணர்ச்சிப் பெருக்கோடு தழுவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க
மண்ணினுளவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என்னிளமான் புகுமூர் திருக் கோளூரே –6-7-1-

(தாரக ,போஷக, போக்கிய வஸ்துக்கள் எல்லாம் கண்ணன்)   
கூற்றமும் சாரா* கொடுவினையும் சாரா* தீ
மாற்றமும்* சாரா வகையறிந்தேன்*
ஆற்றங்கரை கிடக்கும்* கண்ணன் கடல்கிடக்கும்*
மாயன் உரைக்கிடக்கும்* உள்ளத்து எனக்கு I
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் — (திருக்கவித்தலத்தில்) காவிரி ஆற்றங்கரையில்பள்ளி கொண்டிருக்கும் கண்ணனும்கடல்கிடக்கும் மாயன் — திருப்பாற்கடலில் யோக நித்திரையில் கிடக்கும் மாயவனும் ஆன
உரைக்கிடக்கும் — (எம்பெருமான் கண்ணபிரானாக உபதேசித்த) சரம ஸ்லோகம் (உறுதியாக) பதிந்துள்ளஉள்ளத்து எனக்கு- சிந்தையை நான் கொண்டதாலே!கூற்றமும் சாரா - (என்னை) கொடும்பகைமை அணுகாதகொடுவினையும் சாரா - கொடிய பாவங்களும் தீண்டாததீ மாற்றமும் சாரா - தீய எண்ணங்களும் செயல்களும் சேராதவகையறிந்தேன் - வழியை (நான்) புரிந்து கொண்டேன்!

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே ——-10
. கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

No comments:

Post a Comment