Tuesday, December 6, 2022

கல்லிடைப் பிறந்து, போந்து

  மலர்: 037


यथोदकं दुर्गे वृष्टं पर्वतेषु विधावति ।Katopanisad
yathodakaṃ durge vṛṣṭaṃ parvateṣu vidhāvati |
As rain water, (falling) on the mountain top, runs down over the rocks on all sides;
यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखाः द्रवन्ति।BG CH11.28
yathā nadīnāṁ bahavo ’mbu-vegāḥ  samudram evābhimukhā dravanti
As many waves of the rivers flowing rapidly into the ocean

பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்….  வள்ளலார் 

ஆறுகள் வேறு வேறு மலைகளிலும் மேட்டிடங்களிலும் தோன்றி, முடிவில், நிலவுலகு முற்றும் சூழ்ந்து பரந்து நிற்கின்ற ஒரு பெருங்கடலை அடைவதுபோல, இச்சமயங்களும் பேரறிஞர்களின் பெருமை சான்ற உள்ளத்தில் தோன்றி மக்களிடையே பரவிப்  படர்ந்து  ஒன்றாகி எங்கும் பரந்து நிற்கும் பரம்பொருளை நோக்குவதைக் காண்கின்றார்.

கம்பன் ஆற்றுப்படலத்தில் இது போன்ற கருத்தை வலியுறுத்துகிறார் .

கல்லிடைப் பிறந்து, போந்து,
கடலிடைக் கலந்த நீத்தம்,
'எல்லை இல் மறைகளாலும் 
இயம்ப அரும் பொருள் ஈது' என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி,
துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் 
பொருளும்போல், பரந்தது அன்றே. 19
தொல்லையில் ஒன்றே ஆகி பண்டையகாலத்தில் ஒன்றாய் இருந்த சரயு
கல்லிடைப் பிறந்து
கற்களுக்கிடையே ( இமயத்தில்)பிறக்கிறது

மலையில் தோன்றி  ஓடிக  கடலிற் கலந்த  ஆற்று வெள்ளம்,  வேதங்களாலும் அளவிட்டு உரைக்க முடியாத  பரம்பொருளைப்  போல்  ஆதி தொடக்கம்  ஒன்றே ஆனது.  பின்னர்ச் சமயங்களினால் மாறுபட்ட  தெய்வம்  போல்,  தான் செல்லும்  பல  இடங்களிலும்  பல  வகையில்  பரவி (ஏரி,  குளம், வாய்க்கால்,  ஓடை எனப் பல பெயர் பெற்று) நின்றது.  

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment