Tuesday, November 29, 2022

எட்டின் மஹத்வம்

 மலர்: 036

எட்டு என்றால் முதலில் தோன்றுவது பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்கயோகம்.

योगाङ्गानुष्ठानादशुद्धिक्षये
ज्ञानदीप्तिराविवेकख्यातेः॥२८॥28
यमनियमासनप्राणायामप्रत्याहार
धारणाध्यानसमाधयोऽष्टावङ्गानि॥२९॥29 Patanjali yoga sutra
Yogāṅgānuṣṭhānādaśuddhikṣaye
jñānadīptirāvivekakhyāteḥ||28||
Yamaniyamāsanaprāṇāyāmapratyāhāra
dhāraṇādhyānasamādhayo'ṣṭāvaṅgāni||29||
On the destruction of impurity through the practice of the limbs of Yoga, (there emerges) the Light of Knowledge culminating in discriminative knowledge .28
Yama ,Niyama , Āsana , Prāṇāyāma , Pratyāhāra , Dhāraṇā , Dhyāna  (and)
Samādhi - (are) the eight limbs --aṅga-- (of Yoga)
 .29

அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகள் என்னும் எட்டுத் திறமைகளை அடைய முடியும். இவ்வாறு அட்டமா சித்திகள் பெற்றவர்கள் தான் சித்தர்கள்அட்டமா சித்தி எனப்படும்.  இவை: 1 அணிமா, 2 மகிமா, 3 கரிமா, 4 கிமா, 5 பிராப்தி, 6 பிரகாமியம், 7 ஈசத்துவம், 8 வசித்துவம்.


கோளில் பொறியின் குணம் இலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

எட்டுகுணங்களாவன:தன்வயத்தன்ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். 


எட்டின் பெருமையை கூறும் அப்பர்பெருமானின் ஒரு அருமையான பாடலை பார்ப்போம்.

புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
    பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
    கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
    நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

1.புகை=புகக் கூடிய இடங்கள்: இங்கே உயிர்கள் புகக் கூடிய இடங்களை குறிப்பிடுகின்றார். எட்டு பிறவிகளாவன: தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரங்கள் மற்றும் நரகர் என்பன.

2. போக்கு=குற்றம்: எட்டு வகையான குற்றங்கள்அறியாமை, மயக்கம், யான் எனப்படும் அகங்காரம், எனது எனப்படும் மமகாரம், விருப்பு, வெறுப்பு, நல்வினை மற்றும் தீவினை ஆகிய எட்டும் உயிருக்கு உள்ள குற்றங்களாகும்.

3. ஆன்ம தத்துவம், இருபத்து நான்கு தத்துவங்களை சுருக்கி எட்டு தொகுப்பாக கூறுவதும் வழக்கம்.

ஐம்பூதங்கள்,  ஐந்து ஞானேந்திரியங்கள்,

ஐந்து கன்மேந்திரியங்கள், ஐந்து தன்மாத்திரைகள், மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.

4. பூதலங்கள் எட்டு: கீழுலகங்கள் ஏழுடன் நிலவுகத்தையும் சேர்த்து எட்டு உலகங்கள். மேல் உலகங்கள் ஏழுடன் நிலவுலகத்தையும் இணைத்து எட்டு உலகங்கள் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும்.

5. பொழில்கள் என்றால் தீவு என்று பொருள்.

நாவல்,சாகம்,குசை, கிரௌஞ்சம், சால்மலி, கோமேதகம், புட்கரம் மற்றும் தேவர் உலகம் ஆகியவை எட்டு தீவுகள்.

6.எட்டுகடல்களாவன(கலை): உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தேன் கடல், நன்னீர்க்கடல், மற்றும் சக்கரவாக மலையைச் சூழ்ந்துள்ள கடல்.

7. காப்பு என்பதற்கு அரண் என்று பொருள். இந்த எட்டு கடல்களைச் சூழ்ந்த மலைகள் எட்டும் எட்டு அரண்களாக கருதப்படுகின்றன. நிடதம், ஹேமகூடம், இமாசலம், நீலம், சுவேதம், சிருங்கவான், மாலியவான், கந்தமாதனம் ஆகிய மலைகள் எட்டு மலைகளாகும்.

8. காட்சி எட்டு: எட்டு காட்சிகள் என்பதை எட்டு வீரட்டத் தலங்களில் புரிந்த வீரச் செயல்கள்

9. களைகண்: உலகங்கள்- அவையாவன, புவலோகம், சுவலோகம், மகலோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம், விஷ்ணுலோகம் மற்றும் உருத்திரலோகம்.

10. நகை எட்டு: நகை என்பன ஒளிவீசும் கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள்.

11. நாள் எட்டு: நாழிகை, நாள், வாரம், பட்சம், மாதம், ருது, அயனம், வருடம் என்பன

12. நன்மை எட்டு: அறம், பொருள், இன்பம், வீடு, மறம், இன்மை (இல்லாமை), துன்பம், பிறப்பு ஆகியவை.

13.அகமலர்கள்எட்டு: கொல்லாமை,இரக்கம்,

ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு.

14. திகை என்பது திசை என்ற சொல்லின் திரிபு.

நேர்த்திசைகள் நான்கும், கோணத் திசைகள் நான்கும் சேர்ந்து எட்டு.

 

எட்டு தொகுதிகள் என்று கருதப்படும் பொருட்கள் அனைத்தும் தோன்றுவதற்குமுன்னமே தோன்றிய திருக்கோயில்திருவாரூர் திருக்கோயில் என்று பாடலை அப்பர் பிரான் முடிக்கின்றார்.


சிவபெருமான் விரும்பி அணிகின்ற எட்டு மலர்கள்:

புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை, பாதிரி, அலரி, செந்தாமரை

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment