மலர்: 033
स्रोतःस्वरणीषु चाग्निः ।
एवमात्माऽत्मनि गृह्यतेऽसौ
सत्येनैनं तपसा योऽनुपश्यति ॥ श्वेताश्वतरोपनिषत् -१५ ॥
strotaḥ svaraṇīṣu cāgniḥ ।
evamātmātmani gṛhyate'sau
satyenainaṃ tapasā yo'nupaśyati ॥
எள்ளில் எண்ணை போலவும், தயிரில் நெய் போலவும், வெள்ளத்தில் நீர் போலவும், அரணிக்கட்டையில் நெருப்பு போலவும், தியானத்தினால் தன்னில் ஆத்மாவை காண்கிறான்.
இந்த உபநிஷத் கருத்தை பிரதிபலிப்பது போல் உள்ள அப்பர் பெருமானுடைய திருமொழியை பார்ப்போம்:
இறைவன் எங்கு இருக்கிறான்? எப்படிக் காண்பது?என்று வினவுவார்க்கு அப்பர் எளிமையாக ஒரு வழி காட்டுகிறார்
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே. –
விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச்சோதியாய் மாமணிச்சோதியாய் உள்ளான்.
நம்மாழவார் திருவாய்மொழியில் இருந்து ஒரு பாசுரம் :
திடவிசும்பு எரி வளி
நீர்
நிலம் இவை
மிசை
படர்பொருள்
முழுவதுமாய
அவை
யவை
தொறும்
உடல்மிசை
உயிர்
எனக் கரந்தெங்கும்
பரந்துளன்
சுடர்மிகு
சுருதியுள் இவை
உண்ட
சுரனே. 1.1.7
உலகங்களை
எல்லாம்
முடிவு
காலத்தில்
அழியச்
செய்த
இறைவன்,
திடமான
ஆகாயமும்
நெருப்பும்
காற்றும்
நீரும்
நிலமும்
ஆகிய
இவற்றைக்
காரணமாகக்
கொண்டு
படர்ந்த
எல்லாப்
பொருள்களும்
தானேயாகி,
அவ்வப்பொருள்கள்தோறும் உடலுக்குள் இருக்கின்ற
உயிரைப்போன்று மறைந்து, எங்கும் பரந்தவனாய்
ஒளிமிக்க
வேதத்துள்
தோன்றுகின்றவன் ஆவான்.
கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.
No comments:
Post a Comment