மலர்: 031
सङ्गात्सञ्जायते काम: कामात्क्रोधोऽभिजायते || BG2.62||
dhyāyato viṣhayān puṁsaḥ saṅgas teṣhūpajāyate I
saṅgāt sañjāyate kāmaḥ kāmāt krodho ’bhijāyate II
क्रोधाद्भवति
सम्मोह: सम्मोहात्स्मृतिविभ्रम: |
स्मृतिभ्रंशाद् बुद्धिनाशो
बुद्धिनाशात्प्रणश्यति || BG2.63||
krodhād bhavati sammohaḥ sammohāt smṛiti-vibhramaḥ I
smṛiti-bhranśhād buddhi-nāśho buddhi-nāśhāt praṇaśhyati II
புலன்கள் பொருள்களை நினைப்பதால் பற்று உண்டாகிறது .பற்று ஆசையாக(காமம்) பரிணாமிக்கிறது. ஆசை
சினமாக(க்ரோதம்) வடிவெடுக்கிறது சினத்தால்
மனக்குழப்பம்(மோகம்) அதிலிருந்து நினைவின்மை நினைவு நாசத்தால் புத்தி நாசம் புத்தி நாசத்தால்
ஆளே அழிகின்றான்
காமம் க்ரோதம் மோகம் என்ற மூன்றும் அரிஷட்வர்கம் என்ற நமக்குள் இருக்கும் ஆறு எதிரிகளைக் குறிக்கும்.ஆகவேதான் திருக்குறள் இவ்வாறு கூறுகிறது :
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய் – Tirukkural 360
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வாராமற் கெடும்.
கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி
:
வேள்வி காக்க தயரதனிடம் கரிய செம்மலை முனிவன் வேண்டல்:
'தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி' என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.11
மாரிசன் - ஆசையின் வடிவம்
தாடகை - மயக்கத்தின் வடிவம்
ஆசையும் கோபமும் மயக்கமெனும் தாயின் குழந்தைகள் என்பதை அறியலாம் .
काम: क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ||BG16.21||
kāmaḥ krodhas tathā lobhas tasmād etat trayaṁ tyajet
There are three gates leading to the hell of self-destruction for the soul—lust, anger, and greed. Therefore, one should abandon all three.
No comments:
Post a Comment