Wednesday, October 19, 2022

அன்றலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா!

  மலர்: 030



प्रहृष्येत्प्रियं प्राप्य नोद्विजेत्प्राप्य चाप्रियम् |
स्थिरबुद्धिरसम्मूढो ब्रह्मविद् ब्रह्मणि स्थित: || BG 5.20||

na prahṛiṣhyet priyaṁ prāpya nodvijet prāpya chāpriyam I
sthira-buddhir asammūḍho brahma-vid brahmaṇi sthitaḥ II

Established in God, having a firm understanding of divine knowledge and not hampered by delusion, they neither rejoice in getting something pleasant nor grieve on experiencing the unpleasant.

நினைத்தபடி காரியம் நடந்துவிட்டால் மகிழ்ச்சி அடைவதோ, சற்றும் நினைக்காத காரியம் நடந்துவிட்டால் வேதனைப்படுவதோ கூடாது.

இந்த கீதையின் கூற்றுப்படி யாராவது நடந்திருக்கிறார்களா என்றால், திவ்ய தம்பதிகளான ஸ்ரீ ராமனும் சீதாபிராட்டியும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியதை நாம் ராமாயணத்தில் பார்க்கிறோம்

நாளை பட்டாபிஷேகம் என்ற போதும், ராஜ்யம் இல்லை, பதினான்கு வருடம் கானகத்தில் வாழ் என்ற போதும் இருவரும் மனத்தில் ஒரு சலனமும் இல்லாமல் இருந்து காட்டினர்.

இந்நிகழ்ச்சியை கம்பனும் பெரியாழ்வாரும் அனுபவித்ததை அவர்களின் பாசுரங்களை கொண்டு அறிவோம்.

இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? – யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா
!

  யாரும் செப்ப அருங் குணத்து  இராமன் - எவராலும்
சொல்லுதற்கரியநற்பண்புகளையுடைய இராமபிரானது;  திருமுகச் செவ்லிநோக்கின் - திருமுகத்தின்அழகைப்பார்த்தால்; 

எம்மனோரால் இயம்புதற்கு எளிதே - (அது) எம்மைப் போன்றவர்களால்சொல்லுவதற்கு எளிதோ? (அன்று); 

முன்பு பின்பு ஒப்பதே - கைகேயி சொன்னவற்றைக்
கேட்பதற்கு முன்பும் அவற்றைக் கேட்டதற்குப் பின்பும் செந்தாமரையைப் போன்றிருந்தது; 

அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது - அந்தச்
சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்தச்சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்தச் சமயத்தில்; 

அலர்ந்த செந்தாமரையினை -மலர்ந்த செந்தாமரை
மலரினை;  வென்றது - வென்றுவிட்டது.

பெரியாழ்வார்திருமொழியிலிருந்து ஒரு பாசுரம் :

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3- 9-4 

மாற்று தாய்தாயானவள்-தாய்க்கு ஒத்த சுமத்தரையார்
வனம் போகே-வனமே போகு என்றிட–‘நீ காட்டுக்கே போஎன்று நியமிக்க
ஈற்றுத் தாய்பெற்ற தாயாகிய கௌஸல்வை யானவள்
பின் தொடர்ந்து–(தன்னைப்) பின் தொடர்ந்து வந்து
எம்பிரான்-“என் நாயனே! (உன்னைப் பிரிந்து எப்படி தரித்திருப்பேன்”)
என்று அழஎன்று கதறி அழ
கூற்று தாய் சொல்லயமனைப் போல் கொடியளான கைகேயியின் சொல்லைக் கொண்டு
கொடிய வனம் போனகொடிய காட்டுக்கு எழுந்தருளின
சீற்றம் இலாதானைசீற்றமற்ற இராம பிரானை பாடிப் பற;
சீதை மணாளனைஸீதைக்கு வல்லபனானவனை பாடிப் பற
समदु:खसुख: स्वस्थ: समलोष्टाश्मकाञ्चन: |
तुल्यप्रियाप्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुति: ||BG14.24||
sama-dukha-sukha sva-stha sama-lohāśhma-kāñchana
tulya-priyāpriyo dhīras tulya-nindātma-sanstuti
Those who are alike in happiness and distress; who are established in the self; who look upon a clod, a stone, and a piece of gold as of equal value; who remain the same amidst pleasant and unpleasant events-– (they are said to have risen above the three guṇas.)

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment