Saturday, October 1, 2022

வேதம் தமிழ் செய்த மாறன்

 மலர்: 029

திவ்யப்ரபந்தங்கள் தமிழ் வேதங்கள் என்று கூறப்படுவதற்கு ஏதாவது உதாரணங்கள் கூற முடியுமா? என்று நண்பர் ஒருவர் ஒரு சமயம் கூறினார். சேவா ஸ்வாமிகள் எழுதிய உரையிலிருந்து ஒரு நல்ல விளக்கத்தை காண முடிந்தது. .அதை இந்த மலரில் பார்ப்போம்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.-
திருவாய்மொழி 

அமரர்கள் அதிபதி- ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் 
மயர்வற மதிநலம் அருளினன்-வேதாம் ச ப்ரஹிநோதி  
உயர்நலம்- ஆத்ம புத்தி பிரகாசம் 
துயரறு சுடரடி தொழுது- சரணம் அஹம் ப்ரபத்யே

यो ब्रह्माणं विदधाति पूर्वं
यो वै वेदांश्च प्रहिणोति तस्मै
तं देवमात्मबुद्धिप्रकाशं
मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये  - श्वेताश्वतरोपनिषत् -१८

yo brahmāṇaṁ vidadhāti pūrvaṁ
yo vai vedāṁśca prahiṇoti tasmai |
tamha devaṁātmabuddhiprakāśaṁ
mumukṣurvai śaraṇamahaṁ prapadye ||Svetasvara Upanisad
He who created Brahma in the beginning and who, indeed, delivered the vedas to him, - in that very deity, who is the reveller of the knowledge regarding the self, I, being verily desirous of  liberation, seek refuge.
நம்மாழ்வார் தம்முடைய திருவாய்மொழியின் முதல் பாடலிலேயே   வேதக்கருத்தை தெரிவித்திருப்பது ரசிக்கத்தக்கது . மேலும் முதல் மூன்று வரிகளில் உ,அ,ம என்று ஓம்காரத்தை  குறிக்கும் சொற்களை வைத்திருப்பதுவும் கவனிக்கத்தக்கது.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment