Thursday, September 29, 2022

உத்தமன் பேர் பாடி

 மலர்: 028




















यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम् |
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ||BG15.19 ||
yo mām evam asammūḍho jānāti puruṣhottamam I
sa sarva-vid bhajati māṁ sarva-bhāvena bhārata II
அர்ஜுனா ! யார் மயக்கம் அற்றவனாய் இவ்வாறு என்னை 'புருஷோத்தமன்' என்று அறிகிறானோ எல்லாம் அறிந்த அவன் முழு மனத்துடன் என்னை வழுத்துகிறான் .
 மனிதர்களில் நான்கு வகையினர் உண்டு. அதமா அதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்பவை எவை.
அதமா அதமன்
பிறரையும் வாழ விடாமல், தானும் வாழாமல் இருக்கும் பயனற்றவனே அதமா அதமன்.
அதமன்
தான் மட்டும் வாழ நினைப்பவன் அதமன்.
மத்யமன்
தான் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என நினைப்பவன் மத்யமன்.
உத்தமன்
தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவன் சிறந்த உத்தமன்.
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்.
    பிறரிடம் கையேந்தி யாசகம் பெறுவது இழிசெயல். தனக்கு இழிவானாலும், தேவர்களின் நன்மைக்காக வாமனர் மகாபலிசக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்டார். அதன் காரணமாகவே ஆண்டாள் வாமனரை உத்தமன் என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறாள்.

இப்பொது உத்தமனை பாடிய சில பாசுரங்களை பார்ப்போம்.

ஊரான் குடந்தை உத்தமன்
      ஒரு கால் இரு கால் சிலை வளையத்
தேரா அரக்கர் தேர்-வெள்ளம்
      செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான்
      பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான்-தாரா வயல் சூழ்ந்த
      சாளக்கிராமம் அடை நெஞ்சே- -பெரியதிருமொழி 

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment