Monday, September 5, 2022

நைமிசாரணியத்துள் எந்தாய்!

  மலர்: 023


ஊனிடைச் சுவர்வைத்து ஒன்பதூன் நாட்டி
உரோமம் வேய்ந்த ஒன்பது வாசல்*
தானுடைக் குரம்பைப் பிரியும் பொது உன் தன்
சரணமே சரணம் என்றிருந்தேன்*
தேனுடைக் கமலத் திருவினுக்கரசே!
திரைகொள் மாநெடுங்கடல் கிடந்தாய்*
நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்
நைமிசாரணியத்துள் எந்தாய்*- பெரிய திருமொழி 

மாமிசத்தை சுவராக வைத்தும், எலும்புகளைக் கம்பங்களாக நாட்டும், மயிர்களால் மூடியும், ஒன்பது வாசல்களைக் கொண்டும் காணப்படுகிற இந்தச் சரீரத்தை விட்டுப் பிரியும் காலத்தில் தேன் நிறைந்த கமலத்தில் தோன்றிய பெரிய பிராட்டியாரின் நாயகனே, அலைகள் நிறைந்த பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனே, நைமிசாரணியத்து எம்பெருமானே உன்னுடைய திருவடிகளே அடியேனுக்கு காப்பாக இருக்க வேணும் என்று நினைத்து இருந்தேன், உன்னுடைய திருவருளால் என் தவமாகிய உன் திருவடியை வந்தடைந்தேன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी |
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् || BG5.13||
sarva-karmāi manasā sannyasyāste sukha vaśhī
nava-dvāre pure dehī naiva kurvan na kārayan
The embodied beings who are self-controlled and detached reside happily in the city of nine gates free from thoughts that they are the doers or the cause of anything.

The analogy in this verse is also given in the Śhwetāśhvatar Upaniṣhad:

नवद्वारे पुरे देही हंसो लेलायते बहिः
वशी सर्वस्य लोकस्य स्थावरस्य चरस्य १८॥
navadvāre pure dehī haṃso lelāyate bahiḥ  I
vaśī sarvasya lokasya sthāvarasya carasya ca II3.18
The Swan, the ruler of the whole world, of all that is moving and all that is motionless, becomes the embodied self and dwelling in the city of nine gates, flies outward.

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை
நட்பு- thirukkural 338

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment