Friday, September 2, 2022

வதரி வணங்குதுமே!

 மலர்: 022


முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே -பெரிய திருமொழி

ஒரு கையில் முதுகு பிடிச்சு, இன்னொரு கையில் கொம்பு பிடிச்சு, உடம்பு தூக்கி தூக்கி போட, கண்கள் செருக இடைவிடாமல் இருமி, சிறியவர்கள் எல்லாம்  இந்தக் கிழவனைப் பாரேன்என்று பரிகசிப்பதற்கு முன், பத்ரிநாராயணனை சேவியுங்கள் என்று திருமங்கை ஆழ்வார் நம்மை எச்சரிக்கிறார்.

நம்மாழ்வாரும் தன்திருவாய்மொழியில் இதையே எடுத்துக்கூறுகிறார் :

கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்,
வளரொளி மாயோன் மருவிய கோயில்,
வளர் இளம்பொழில் சூழ் மாலிருஞ்சோலை,
தளர்விலராகில் சார்வது சதிரே.-திருவாய்மொழி

அதாவது, நல்ல விஷயங்களை கற்பதற்கான அறிவு வேட்கையும், (ஒரு குருவிடமிருந்து) எதையும் விரைவில் உள் வாங்கிக் கொள்ளும் ஞானமும்  நிறைந்திருக்கும்  இளமைப்பருவத்திலேயே, பரமனைக் கைக்கொள்ளுதலை ஆரம்பித்து விடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

மேலும் இதேபோன்று பர்த்ருஹரியும் வைராக்கிய சதகத்தில் ஒரு அருமையான பாடலை அருளியுள்ளார்:

यावत् स्वस्थमिदं शरीरमरुजं यावच्च दूरे जरा।
यावच्चेन्द्रियशक्तिरप्रतिहता, यावत् क्षयो नायुष:
आत्मश्रेयसि तावदेव विदुषा कार्य: प्रयत्नो महान्।
सन्दीप्ते भवने तु कूपखननं प्रत्युद्यम: कीदृश:॥Vairaagya satakam

As long as this body is self-same, as long as old age is distant,
 as long as capabilities of organs are unaffected, as long as life is not decayed or diminished, until such time only wise should exert great effort for self-glory
; What type of undertaking it would be, (if) one were to be digging the well, when the house is (already) on fire ?

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment