மலர்: 025
கோவர்தன கிரிதர கோவிந்த கோகுல பாலாக பரமானந்த I
ஸ்ரீவத்சாங்கித ஸ்ரீகௌஸ்துப தர பாவக பயஹர பாஹி முகுந்த IIநாராயண தீர்த்தர்
ஸ்ரீவத்சாங்கித ஸ்ரீகௌஸ்துப தர பாவக பயஹர பாஹி முகுந்த IIநாராயண தீர்த்தர்
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே- திருவாய்மொழி3.3.8
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே- திருவாய்மொழி3.3.8
கல் மாரியாலே
திருவாய்ப்பாடியில் இருந்தவர்கள் துன்பப்பட,
கோவர்த்தன
மலையை
ஏந்தி
அவர்களைக்
காத்தவனாய்,
அன்று
பூமியை
அளந்து
தனக்காகக்
கொண்ட
உபகாரகனான
உயர்ந்த
தலைவன்
சென்று
சேர்ந்த
திருவேங்கடமாகிற பெரிய திருமலை ஒன்றை
மட்டும்
தொழ,
நம்முடைய
விரோதிகள்
தானே
ஒழிந்துவிடும்.
மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–
திருவாய்மொழி- 7-4-10
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–
திருவாய்மொழி- 7-4-10
மேய்கிற பசுக்களானவை கீழே ஒதுங்கும்படியும் கீழ் மேலாக மலையை எடுத்ததால் மலையில் வாழும் யானை முதலிய மிருகங்கள் புரண்டு விழும்படியும் சுனைகளின் வாய்வரை நிறைந்த நீரானது பெரிய கோஷத்தோடு சொரியும்படியும் தன் இனமான ஆயர்களையும் தன் பசுக்களையுமுடைய திருவாய்ப்பாடி முழுவதும் அங்கே ஒடுங்கும்படியும் ஆபத்தைப் போக்குபவனான கண்ணன் தீய மழையைத் தடுக்க கோவர்த்தனம் என்கிற மலையை எடுத்தான்.
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
பெருமழை பெய்து ஆயர்பாடி வெள்ளத்தில் தவித்த போது கோவர்த்தனம் என்னும் குன்றை குடையாக எடுத்தவனே! உன் குணம் போற்றி!
கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

No comments:
Post a Comment