மலர்: 026
வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி-2.3.8
பள்ளியில்
கல்வி கற்று வந்த தன் மகன் (பிரகலாதன்) வாயில் ஆயிரம் பெருமாள் பெயர்கள் ஒளியுடன் அழகாக ஞானத்தால் (கூறுவதை பார்த்து) அந்த நேரம் சிறிதும் பொறுக்க இயலாதவன் ஆகி தன் மகனை சீறி வெகுண்டு (நாராயணன் எங்கே இருக்கிறான்டா என்று கேட்க, எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூற, எங்கே இந்த தூணில் காட்டுடா பார்ப்போம் என்று) தூணை அடிக்க, வளைந்த கூரான பற்களும், நெருப்பு போன்ற கண்களும், பெரிய வாயும் (உடைய) தெளிந்த தூய்மையான நரசிங்கம் ஆகிய (என் தேவாதி) தேவனை, திருவல்லிக்கேணியில் கண்டேனே.
கம்ப ராமாயணத்திலே இரணியவதைப்படலத்திலே சில அருமையான பாடல்களில் இதே விஷயம் கூறப்பட்டுள்ளது.
சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் சொன்னான்.
"பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம்-பின்னை
வளர்ந்தது திசைக் எட்டும் பகிரண்டம் முதல் மற்றும்
அளந்தப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறைய கிற்பார்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும்.
பிளந்த தூணியிருந்து வெளிப்பட்ட அந்த சிங்கம் எட்டுத் திசைகளிலும் பரவி, இந்த வையகத்திற்கு அப்பால் உள்ள அண்டம் முதலிய பிற கோள்கள், பிற படைப்புகள் ஆகியவற்றை அளப்பதாக நீண்டு வளர்ந்தது. அதனால் உலக உருண்டை மேலும் கீழும் ஏற்பட்டதுபோல் தோற்றம் கொண்டது.
மேலும் ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகம் :
सत्यं विधातुं निजभृत्यभाषितं
व्याप्तिं च भूतेष्वखिलेषु चात्मन: ।
अदृश्यतात्यद्भुतरूपमुद्वहन्
स्तम्भे सभायां न मृगं न मानुषम् ॥ १७ ॥
satyaṁ vidhātuṁ nija-bhṛtya-bhāṣitaṁ
vyāptiṁ ca bhūteṣv akhileṣu cātmanaḥ
adṛśyatātyadbhuta-rūpam udvahan
stambhe sabhāyāṁ na mṛgaṁ na mānuṣam
To prove that the statement of His devotee Prahlāda was
substantial — in other words, to prove that the Supreme Lord is present
everywhere, even within the pillar of an assembly hall — the Supreme
Personality of Godhead, Hari, exhibited a wonderful form never before seen. The
form was neither that of a man nor that of a lion. Thus the Lord appeared in
His wonderful form in the assembly hall.
கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

No comments:
Post a Comment