Tuesday, September 5, 2023

ஒருத்தி மகனாய் பிறந்து

 மலர்: 047

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत |
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् || 7||

yadā yadā hi dharmasya glānir bhavati bhārata
abhyutthānam adharmasya tadātmānaṁ sṛijāmyaham

Whenever there is a decline in righteousness and an increase in unrighteousness, O Arjun, at that time I manifest Myself on earth.

परित्राणाय साधूनां विनाशाय दुष्कृताम् |
धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे || 8||

paritrāṇāya sādhūnāṁ vināśhāya cha duṣhkṛitām
dharma-sansthāpanārthāya sambhavāmi yuge yuge

To protect the righteous, to annihilate the wicked, and to reestablish the principles of dharma I appear on this earth, age after age.

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

Ps:Krishna jayanti -நல்வாழ்த்துக்கள்.

Tuesday, May 9, 2023

தொழும் காதல் களிறு அளிப்பான்

  மலர்: 046


गजेन्द्र रक्षा त्वरितं भवन्तं
ग्राहैरिवाहं विषयैर्विकृष्टः
अपार विज्ञान दयानुभावम्
आप्तं सतामष्टभुजं प्रपद्ये Ashtabhuja ashtakam

gajendra rakShA tvaritaM bhavantaM
grAhairivAhaM viShayairvikRRiShTaH |
apAra vij~nAna dayAnubhAvam
AptaM satAmaShTabhujaM prapadye | | 1 | |

In this sloka, Swami Desikan compares our lives to one being attacked and torn apart by our senses and dragged towards them on all sides as if by vicious crocodiles, and invokes Bhagavan's mercy and protection just as in the case of Gajendra when attacked by the crocodile.

எம்பெருமான் சர்வ சக்திமான் என்றபோதும் தன் அடியார்க்கு ஒரு துன்பம் வந்தபோது தானே நேரில் வந்து உதவும் குணத்தை ஆழ்வார்கள் பல பாடல்களில் அனுபவித்து உள்ளனர். அதில் சில பாடல்களை இன்றய விஷயமாக பார்க்கலாம் .

மழுங்காத வைந்நுதிய
சக்கரநல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறுஅளிப்பான்
புள்ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே
படையாக மலர்உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால்உன்
சுடர்ச்சோதி மறையாதே? Thiruvaimozhi-3,1.9
(தொழும் காதல் - தொழவேணுமென்கிற காதலையுடைய
களிறு - கஜேந்திராழ்வானை)

தொழ வேண்டும் என்ற பெரும் காதல் உணர்வுடன் இருந்த களிறு ஆகிய கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றுவதற்காக, மழுங்குதல் இல்லாத கூர்மை பொருந்திய வாய்களை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்தி, கருடப்பறவையின் மேல் ஏறி, யானை துன்பமடைந்து கொண்டிருந்த மடுக்கரையில் தோன்றினீர்! அது பொருந்தும்! உமது மழுங்காத ஞானமே கருவியாகக் கொண்டு அனைத்தையும் நடத்திக் கொள்ளலாமே! விரிந்து பரந்த உலகில் தொழும் அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து தோன்றினால் உமது பெரும் பேரொளி குன்றி விடாதா

திருமங்கை ஆழ்வாரும் ஒரு அற்புதமான பாடல் திருஅல்லிக்கேணி கஜேந்திர வரதனுக்காக அருளியுள்ளார்.

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு போய் இறங்கின காட்டில் திரியும் கஜேந்திரன் தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக முதலையானது அவ் யானையின் காலைத் கௌவிக்கொள்ள, அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு பொய்கைக் கரையிலே எழுந்தருளி அங்கே நின்று திருவாழியை அந்த முதலையின்மீது பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய மாடம் மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேன்.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.




Wednesday, May 3, 2023

தான் என்னை முற்றப் பருகினான்

 மலர்: 045

இறைவன் நம்மை அடைய செய்யும் முயற்சி பெரியதா அல்லது நாம் அவரை அடைய செய்யும் முயற்சி பெரியதா என்றால் இறைவனுடைய முயற்சியே பெரியது என்று ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் திண்ணமாக எடுத்து உரைக்கிறார்கள் . காளிதாசன் குமார சம்பவத்தில் தவம் செய்யும் பார்வதியை  அணுகி சிவபெருமான் கூறுவதாக ஒரு அருமையான பாடல் உள்ளது.

दिवं यदि प्रार्थयसे वृथा श्रमः पितुः प्रदेशास्तव देवभूमयः।
अथोपयन्तारमलं समाधिना न रत्नमन्विष्यन्ति मृग्यते हि तत्॥
Divamyadipraarthayasevrthaasramah
Pituhpradesaahtavadevabhoomayah.
Athopayantaaramalamsamaadhinaa
Na ratnamanvishyatimrgyate hi tat.

If  you desire heaven, then your efforts are in vain because you father’s place is as good as heaven. If your penance is for getting a prospective bridegroom, then enough of this vow. A gem is always sought after and does not go in search of a possessor.

அரசன் தான் ரத்னத்தை தேடிப்போவான் ,எங்காவது ரத்னம் அரசனை தேடி போனதுண்டோ?( இங்கு அரசன்- பரமாத்மா, ரத்னம்- ஜீவாத்மா )

நம்மாழ்வார் இதையே தம் பாடலில் வலியுறுத்துகிறார் :

வந்தருளிஎன் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத்தாய் தந்தையே! முழுஏழுலகும் உண்டாய்!
செந்தொ ழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கலநகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே. 5.7.7

உன் இருப்பிடங்களை விட்டு இங்கே வந்தருளி, உன் விஷயத்தில் விருப்பமற்றிருந்த என் நெஞ்சை இருப்பிடமாகக் கொண்டு என் இருப்பை நோக்கி பரமபதவாஸிகளின் இருப்பையும் வளர்ப்பவனாய் இவ்வுலகத்திற்கு தனித்துவம் வாய்ந்த முதன்மைத் தாயாய் தந்தையாய் எல்லா உலகங்களையும் அமுதுசெய்து திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தாய். வேறு எதிர்பார்ப்பு இல்லாத நேர்மையான செயல்களை உடையவர்களுடைய வைதிகமான பகவதாராதனம் மாறாமல் நடக்கும் சிரீவரமங்கலநகரிலே முடிவற்ற குணங்களையுடையவனே! அடியேனை நீ உன் விஷயத்தில் இருந்து அகற்றாமல் இருக்கவேண்டும்.

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே.

தன் குணங்களையும் செயல்களையும் காட்டி என்னை நீராக்கி குறை சிறிதும் இல்லாதபடி பருகினான் –

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


Tuesday, March 28, 2023

அகப்பட்டேன் வாசுதேவன் வலையினுள்ளே

  மலர்: 044










"रामः कमलपत्राक्षः सर्वसत्त्व मनोहरः।"

This is the description of Rama given out by Hanuman in his response to Sita.

यथा कप्यासं पुंडरीक मेव अक्षिणी"
That Purusha is described as "कमलपत्राक्षः
"
That is the description of the "Purusha "in "Chandogyopanishad".

திருவாய்மொழி ஈடு வ்யாக்யானத்தில் ஒரு அழகான ஐதிஹ்யம் சொல்லப்பட்டிருக்கிறதுதிருவரங்க பெருமாள் அரையர் "அகப்பட்டேன் வாசுதேவன் வலையுள்என்ற பாசுரத்திற்கு அபிநயம் பிடிக்கும்போது மீன் பிடிக்கும் வலையை காண்பித்தார்இதைப்பார்த்த ராமானுஜர் வலை என்பதை பெருமாளுடைய கண்களை குறிப்பதாக சைகை செய்து விளக்கினார்இந்த அற்புதமான பாசுரத்தை காண்போம்.

அன்னைஎன் செய்யில்என்? ஊர்என் சொல்லில்என்? தோழிமீர்!
என்னைஇனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.
திருவாய்மொழி 5-3-6

தோழியர்களே! முற்பட்டவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனும் வளம் பொருந்திய துவாரகை என்னும் திவ்விய தேசத்திற்கு அரசனும் மணிவண்ணனுமான வாசுதேவனுடைய வலைக்குள்ளே அகப்பட்டேன்: ஆதலால், இனி, தாயானவள் எந்தக் காரியத்தைச் செய்தால் என்ன? ஊரிலுள்ள மக்கள் எந்தப் பழிச் சொற்களைக் கூறினால் என்ன? என் பக்கல் உங்களுக்கு ஆசை வேண்டாம் என்கிறாள்.

ஆண்டாளும் நாச்சியார்மொழி பாசுரத்தில் எம்பெருமானுடைய கண்கள் தன்னை ஈர்ப்பதை வெளிப்படுத்துகிறாள் .

கார்த்தண் கமலக்கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின்குப்பாயப் புகர்மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே

காளமேகத்திலே குளிர்ந்த தாமாரை மலர் பூத்தாற்போன்றிருக்கும் திருக்கண்கள் என்கிற பெரிய கயிறைக் கொண்டு என்னை அகப்படுத்தி என் நெஞ்சையும் இழுத்துக் கொண்டுபோய் விளையாடும் ஸர்வேச்வரனான எம்பெருமானைப் பார்த்தீர்களா? போர்வையாகப் போர்த்திய முத்துச் சட்டையை உடையதாய் தேஜஸ்ஸை உடையதாய் பெரிய யானைக்குட்டிபோலே வேர்த்து நின்று விளையாட வ்ருந்தாவனத்தே கண்டோமே [வேர்வைத்துளிகளை ஒளிமிகுந்த முத்துக்களாக விளக்குகிறாள்.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.