Wednesday, April 13, 2022

மூவர் ஏற்றிய விளக்கு

மலர்: 003
முதலாழ்வார்கள் மூவர்சித்தாதிரி ஆண்டு ஐப்பசி மாதத்தில்அடுத்தடுத்த 
நட்சத்திரத்தில் இவர்கள் பிறந்தது ஒரு அதிசயம்.இம்மூவரின் பாடல்கள் முறையே பரபக்தி ,பர ஞான , பரம பக்தியை குறிக்கும் என்று பெரியோர்கள் காட்டுவது உண்டு. 






















भक्त्या त्वनन्यया शक्य अहमेवंविधोऽर्जुन |
ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप ||BG11.54||

bhaktyā tv ananyayā śhakya aham evaṁ-vidho ’rjuna
jñātuṁ draṣhṭuṁ cha tattvena praveṣhṭuṁ cha parantapa

 O Arjun, by unalloyed devotion alone can I be known as I am (1), standing before you. Thereby, on receiving My divine vision, O scorcher of foes, one can see me in essence (2), and enter into union with Me (3).







வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்றுபொய்கையாழ்வார்

(வையம் = மண்ணுலகம்தகளி = அகல்வார் = நீண்டவெய்ய = வெம்மையானசுடர்ஆழி = ஒளிமிக்க சக்கரப்படைஇடர்ஆழி = துன்பமாகிய கடல்)

வருத்தும் புறவிருள் மாற்ற எம்பொய்கைபிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றைத்திரித்தன் றெரித்த திருவிளக்கு
அதாவது வருத்தும் புற இருள் மாற்ற பொய்கையாழ்வார் வேதங்களின் பொருளையும்தமிழையும்தன்னையும் கூட்டித் திரியாக்கி தீபச் சுடரை ஏற்றினார் அன்று என்று சொல்கிறார்! -Thiruvarangatamudanaar

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாநன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் I    பூதத்தாழ்வார்

(சிந்தை = உள்ளம்நன்பு = நன்மை)

அன்பு, ஆர்வம், இன்பு என்றவை எல்லாம் இறைவன் பால் ஏற்படும் ஈர்ப்பில் நமக்குண்டான சிறப்பு நிலைகளாகும். உலகில் பொருள்கள் பிரகாசிப்பதற்கு விளக்கு ஏற்றுவர். இவரும் நம் இயல்பும் பெருமாளின் இயல்பும் பிரகாசிப்பதற்காக ஞானச் சுடர் விளக்கை ஏற்றினார்.

இவ்விருவர் ஏற்றிய விளக்கில் பேயாழ்வார் இலட்சுமி நாராயணனைக் கண்டார்.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று - பேயாழ்வார்

(அருக்கன் = கதிரவன்செருக்கிளரும் = போர்க்களத்தில் கிளர்ச்சியுடன் விளங்கும்பொன்ஆழி = பொன்மயமான சக்கரப்படைசங்கம் = சங்கு;ஆழிவண்ணன் = கடல் நிறம் கொண்ட பெருமான்.)

 பரிந்துரை கூறி நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன்அவருடைய சேர்க்கையினாலே நிறம் பெற்ற திருமேனியைக் கண்டேன்சூரியன் போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன்போரில் சீறும் திருச்சக்கரத்தையும்மற்றொரு திருக்கையில் உள்ள திருச்சங்கினையும் சேவிக்கப் பெற்றேன்’ என்கிறார் பேயாழ்வார்.

மற்ற ஆழ்வார்களுக்கு முன்னடி அவதரித்து அவர்களுக்கு வழிகாட்டியாகத் திவ்யபிரபந்தங்களை முதன் முதலில் அருளிய பெருமையால் இவர்கள் முதலாழ்வார்கள் என்று பெயர் பெற்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 100 பாசுரங்கள் இயற்றினர், அவையே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்று போற்றப்படுகின்றன.

 கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.
பி.கு : இன்று தமிழ் வருட பிறப்பு . எல்லோருக்கும் நல் வாழ்த்துக்கள்.    ( 14.4.2022 )

No comments:

Post a Comment