மலர்: 005
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும்யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ ?
கடல் ஞாலத்து ஈர்க்கிவை என் சொல்லுகேன் ?கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே.
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும்யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ ?
– திருவாய்மொழி 5-6-1
கடலுடன் கூடிய இந்த உலகத்தைப் படைத்தவன் நானே என்றும் கடலுடன் கூடிய இந்த உலகமே நான்தான் என்றும் மகாபலியிடமிருந்து இவ்வுலகத்தைக் கொண்டவனும் நானே என்றும் பிரளயத்தில் கடலுக்குள் புதையுண்ட இதை மேலே கொண்டு வந்தவனும் நானே என்றும் இவ்வுலகத்தைக் காப்பதற்காக ஊழிக் காலத்தில் இதை உண்டவனும் நானே என்றும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலிருக்கும் இவள் சொல்வதெல்லாம் இவள் மீது திருமாலாகிய ஈசன் ஆவிர்ப்பவித்துவிட்டான் என்றே தோன்றுகிறது என்கிறாள் தாய்.
“நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே.” -
மாட்டைப் பார்க்கிறாப்போல உடம்பையும் , வருகின்ற பாலை போல ஜீவனையும் , பாலிலிருந்து வரும் நெய் போல பரமாத்மாவை பார்க்கணும். அது தான் யோக லக்ஷ்ணம் . வெறுமனே கண்ணுக்கு தென்பட்ட வஸ்துவை மட்டும் பார்ப்பது விவேகம் ஆகாது .
எல்லா வஸ்துக்களிலும் எம்பெருமானை பார்க்கவேண்டும் .
எம்பெருமானில் எல்லா வஸ்துக்களையும் பார்க்கவேண்டும் .
எம்பெருமானில் எல்லா வஸ்துக்களையும் பார்க்கவேண்டும் .
यो मां पश्यति
सर्वत्र सर्वं च मयि पश्यति |
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति ||BG 6.30||
yo māṁ paśhyati sarvatra sarvaṁ cha mayi paśhyati
tasyāhaṁ na praṇaśhyāmi sa cha me na praṇaśhyati
For those who see Me everywhere and see all things in Me, I am never lost, nor are they ever lost to Me.
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति ||BG 6.30||
yo māṁ paśhyati sarvatra sarvaṁ cha mayi paśhyati
tasyāhaṁ na praṇaśhyāmi sa cha me na praṇaśhyati
For those who see Me everywhere and see all things in Me, I am never lost, nor are they ever lost to Me.
கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.
No comments:
Post a Comment