Tuesday, April 19, 2022

அழகியான் தானே, அரி உருவம் தானே

 மலர்: 004


தனக்குரிய னாயமைந்த தானவர்கோன் கெட்டான்
உனக்குரிய னாயமைந்த னுய்ந்தான் - நினைக்குங்கால்
வேளுக்கை யாளரியே! வேறுதவி யுண்டோ?உன்
தாளுக்கா ளாகாத வர்க்கு. (77)
 பிள்ளைப்  பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி.
சர்வேஸ்வரனது திருவடிகளை வணங்காமல் தானே சர்வேஸ்வரன் என்று சொன்ன இரணியனை அப்பெருமான்  அழித்ததையும் சர்வேஸ்வரனுக்கு அடிமையென்று தன்னை எண்ணிய ப்ரஹ்லாத ஆழ்வானை அப்பெருமான் அனுகிரஹித்ததையும் ஆலோசிக்குமிடத்து எம்பெருமானது திருவடிகளை பற்றாதார் ஆபத்து காலத்தில் ஒரு துணையும் இன்றி அழிய வேண்டிவரும் .

திருவேளுக்கை:
"வேள்" என்பதற்கு "ஆசை" என்பது பொருள். "இருக்கை" என்பதற்கு "இருப்பிடம்" என்பது பொருள்.
பிருகு முனிவரின் விருப்பத்திற்கிணங்க இறைவன் காட்சி தந்த இடம் என்பதால் இத்தலம் அமைவிடத்திற்கு "திருவேளுக்கை" என்ற பெயர் உண்டானது.
சிம்ம முகம் கொண்டு அழகிய திருமேனியாக காட்சி தந்து அருளுவதால் இத்தல இறைவனுக்கு அழகிய சிங்கர் என்பது திருநாமம்.
உற்சவரின் திருநாமம் முகுந்த நாயகன் என்பதாகும்
.

In KaamaasikAstakam Swami Desikan  has given an extremely moving and
profound declaration of the Lord's dedication to protection of those who have taken refuge.
"tvayi rakshati rakshakaihi kimanyai:
tvayi cA rakshakai: kimanyai: !
ithi nishcita dhi: srayAmi nityam
nrhare vegavatI tatAsrayam tvAm !!"

Swami Desikan makes an emphatic declaration - "when you are there to save me why indeed should I seek other gods? And should you decide not to save me, who else will dare intercede?"

இரந்துரைப்ப துண்டுவாழி ஏமநீர்தி றத்தமா,
வரம் தரும்தி ருக்குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர்,
 பரந்தசிந்தை யொன்றிநின்று நின்னபாத பங்கயம்,
 நிரந்தரம்நி னைப்பதாக நீநினைக்க வேண்டுமே
.- Thirumazhisai alwar

 கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

No comments:

Post a Comment