மலர்: 006
पृष्ठतस्तु धनुष्पाणिर्लक्ष्मणोऽनुजगाम ह।।3.11.1।।
Prushtatastu dhanur paanih lakshmano anujagaama ha II
Rama walked in front, Sita with a beautiful
waist, in the middle and Lakshmana holding the bow, behind them II
வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.
சூரியனது ஒளியானது தன்திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில் இல்லையாய் மறைந்துவிடும்படி;
பொய்யோஎனும் இடையாளொடும் - இல்லையோ என்று சொல்லத்தக்க நுண்ணிய இடையினை உடைய சீதையோடும்;
இளையானொடும் – தம்பியாகிய இலக்குவனோடும்;
போனான் - (காட்டு வழியே) நடந்து செல்லலானான்.
மை, அடர்ந்து
கருநிறம்
உடையது;
செறிவான
கருமைக்கு
உவமையாயிற்று,
மரகதம்
பசுமைநிறம்படைத்ததாய்க் குளிர்ச்சி தருவதாதலின்
நிறத்தோடு
தண்மைக்கும் ஒப்பாயிற்று. மறிகடல்நீலநிறம் படைத்ததாய்
இடையறாது
இயங்கிக்கொண்டுள்ளது; ஆதலின், இயங்குகின்ற இவனது சோபைக்கு
உவமையாயிற்று, மழை முகில் - கருநிறம்
படைத்து நீர்
என்னும்
பயனும்
உடையகாரணத்தால் உயிர்களுக்கு நலம் செய்வது ஆதலின்
உவமையாயிற்று. கருமையும், தண்மையும், இடையறாஇயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இவற்றுள் தனித்தனி
காணல்
அன்றி
இவை நான்கும்
ஒருங்கேயுடைய இராமபிரானுக்கு ஒருங்கே உடையதொரு
உவமைகாண்டல்
அரிதாயினமை
பற்றி
அதிசயித்து
இனிஉவமை
சொல்லமாட்டாமையாகிய
இரக்கமும்
தோன்றி
‘ஐயோ’
என
முடித்தார்.
(விளக்கம் :தமிழ் இணையக் கல்விக்கழகம்)
வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங்கிற்றும் கண்டிலமால், ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா. மருங்கு.54
கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

No comments:
Post a Comment