Tuesday, May 3, 2022

வண்டினம் முரலும் சோலை

  மலர்: 009















यस्मिन् शास्त्रे पुराणे वा,हरिभक्तिर्न दृश्यते
श्रोतव्यं नैव तच्छास्त्रं,यदि ब्रह्मा स्वयं वदेत् ।।
"எந்த ஒரு சாஸ்திரத்தில் ஹரி பக்தி விஸ்தரிக்கப்படவில்லையோ, அதை பிரம்மாவே கூறியிருந்தாலும் அது ஏற்புஉடையது அல்ல ". இந்த சாஸ்திர வாக்கியத்தை ஆழ்வார்கள் எப்படி தங்கள் பாசுரங்களில் கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதனவும் சோலை  குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணி திருவரங்கமென்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும் சோற்றைவிலக்கி
நாய்க்கிடுமினீரே. -திருமாலை 14

திருவரங்கத்தின் வண்டுகளின் கூட்டங்கள் சோலைகளில் ரீங்காரம் செய்கின்றனமயில் கூட்டங்கள் நடனமாடுகின்றனமேகங்கள் மேலே வந்து அணைந்து நிற்கின்றனகுயில் கூட்டங்கள் ஒன்றை ஒன்று இனிமையான குரலில் கூவி அழைக்கின்றனதேவாதி தேவனான சர்வேசுவரன் நித்தியவாசம் செய்கிறான். சம்சாரத்திற்கு ஆபரணமாகவுள்ள (இப்படிப்பட்ட பெருமைகளையுடைய) "திருவரங்கம்" என்று வாயால் சொல்லாதநன்றி இல்லாத மூர்க்கர்கள், மேல் விழுந்து சாப்பிடும் சோற்றை விலக்கிநீங்கள் நாய்க்குப் போடுங்கள்.

பெரியாழ்வாரும்தமது திருமொழியில் இதையே வலியுறுத்துகிறார் .

"ஆமையின் முதுகு அத்திடைக் குதி
     கொண்டுதூ மலர் சாடிப் போய்த்
தீமை செய்து இளவாளைகள் விளை
     யாடும் நீர்த் திருக்கோட்டியூர்
நேமி சேர் தடங்கையினானை
     நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்
பூமிபாரங்கள் உண்ணும் சோற்றினை
     வாங்கிப் புல்லைத் திணிமினே".

இந்தப் பூமிபாரங்கள் விலங்காகப் பிறக்காமல், மனிதனாகப் பிறந்து, மனிதனானவன் உண்ணுகின்ற சோற்றை உண்ணுகின்றனவே. வேண்டாம், அவர்கள் உண்ணும் சோற்றை விலக்கிவிட்டுஅவர்கள் வாயிலே புல்லைத் திணியுங்கள் என்கின்றார் பெரியாழ்வார்.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


 

No comments:

Post a Comment