மலர்: 014
अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च ।
निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी ॥BG12.13॥
संतुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः ।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः ॥BG12.14॥
12.14 Ever content, steady in meditation, self-controlled, possessed of firm conviction, with the mind and intellect dedicated to Me, he, My devotee, is dear to Me.
பகவான் கீதையில் சொல்லியபடி எல்லா குணங்களும் பொருந்திய ராமாநுஜரைப்பற்றி திருவரங்கத்து அமுதனார் தம்முடைய நூற்று அந்தாதியில் பலபடியாக புகழ்ந்து உள்ளார் .
சித்திரை திருவாதிரை! இராமானுசரின் திருநட்சத்திரம்/பிறந்தநாள்
தனக்கு பண்ணின உபகாரத்தை நினைந்து நேரே ஸ்ரீ எம்பெருமானாரை நோக்கி, தேவரீர் உடைய அருளின் திறத்தை இவ் உலகில் யார் தான் அறிவார் என்கிறார் –
ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை?! அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! வந்து நீ என்னை உய்த்த பின் உன்
சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே!
கார் ஏய்-கரு முகிலை ஒத்த
கருணை -கிருபையை உடைய
இராமானுச -எம்பெருமானாரே -நான்
அல்லலுக்கு -துன்பத்திற்கு
நேரே உறைவிடம்-நேரே குடி இருக்கும் இடமாக உள்ளேன்
நீ வந்து -தேவரீராக எழுந்து அருளி
என்னை உற்ற பின்-என்னை யுய்த்த பின்- –அல்லலுக்கு உறைவிடமான என்னை அடைந்ததற்குப் பிறகு
உன் சீரே -தேவரீர் உடைய கல்யாண குணங்களே
உயிர்க்கு -என்னுடைய ஆத்மாவுக்கு
உயிராய் -தாரகமாய்
அடியேற்கு-அடியானான எனக்கு
இன்று தித்திக்கும் -இப்பொழுது இனிக்கின்றன
நின் அருளின் தன்மை -தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை
இக்கடல் இடத்தில் -இந்தக் கடல் சூழ்ந்த உலகத்தில்
யார் அறிபவர் -யார் தான் அறிவார் –

No comments:
Post a Comment