Thursday, May 26, 2022

மும்மைசால் உலகுக்கெல்லாம்

  மலர்: 016

The term "Rama" has an esoteric significance. It consists of three syllables: 
Ra + Aa + MaRa signifies Agni (the Fire-god). Aa represents Surya (the Sun- God). Ma representsChandra (the Moon-god). The combination of the three letters constitutes the Rama nama.
 Ra, representing the Fire-god, burns away all sins, Aa, representing the Sun god, dispels the darkness or ignorance. Ma, representing the Moon-god, cools one's temper and produces tranquility. The name Rama has the triple power of washing away one's sins, removing one's ignorance, and tranquilizing one's mind. -Sivananda














கம்பர் ராம நாமத்தின் மகிமையை வாலியின் வாயிலாக  ஓர் அற்புதமான பாடலின் மூலமாக வெளிப்படுத்துகிறார் :

மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்
வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும். இராம என்ற சொல்லை, வாலி தனது மார்பில் பாய்ந்த அம்பில் கண்டான்

ராமநாமத்தினால் ஏற்படும் நன்மைகளை கம்பன் குறிப்பிடுகிறார் :

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்
.

****
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே
.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment