மலர்: 012
तासामाविरभूच्छौरि: स्मयमानमुखाम्बुज: ।
पीताम्बरधर: स्रग्वी साक्षान्मन्मथमन्मथ: ॥ २ ॥ ŚB 10.32.2
பகவானின் வேறெந்த குணத்திற்கும் மயங்காதவர்கள் கூட அவனுடைய அழகில் மயங்கிவிடுவர். முற்றையும் துறந்து காட்டில் வாழும் முனிவர்களும் ராமனின் அழகை கண்டு மோகித்து இருந்தனர் என்று வால்மீகி கூறுகிறார். பகவதத்திலோ கண்ணனின் அழகு மன்மதனுக்கு மன்மதனாய் விளங்கினான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆண்டாள் பிராட்டியார் நாச்சியார் திருமொழியில் பகவானின் அழகை வர்ணிப்பதை பார்ப்போம்:
எழிலுடைய அம்மனைமீர்!
என்னரங்கத் தின்னமுதர்;
குழல் அழகர் வாயழகர்;
கண்ணழகர்; கொப்பூழில்
எழுகமலப் பூவழகர்;
எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும்
கழல்வளையே ஆக்கினரே!
—ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி
திருச்சிக்கு அருகில் உள்ள திருக்கோழி எனும் திரு உறையூர்ப் பெருமாளின் வடிவழகில் மயங்கிப் போய், அந்த அழகிய மணவாளனை தன் அழகுத் தமிழால் வர்ணித்து, ஈற்றடியில் அப்பரந்தாமனை ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல “அச்சோ ஒருவர் அழகியவா” என்று திருமங்கை மன்னன் பரவசமாகக் கொஞ்சுகிறார்!
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன
பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணமென்னில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா
— திருமங்கை ஆழ்வார்- பெரிய திருமொழி
பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணமென்னில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா
— திருமங்கை ஆழ்வார்- பெரிய திருமொழி
கம்பன் இராமனையும் சீதையையும் எப்படி அனுபவிக்கிறார் என்று பார்ப்போம்:
இராமன்:
“மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்”
“மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்”
சீதை:
இப்பாவை தோன்றலால் அழகெனும் அழகும் ஒர் அழகு பெற்றதே' என்று குறிப்பிடுகிறார்.
கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

No comments:
Post a Comment