Wednesday, May 4, 2022

நாராயணா ஓ! மணிவண்ணா, நாகணையாய்

   மலர்: 010









கஜேந்திர மோக்ஷம் ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் ஒரு அருமையான நிகழ்ச்சி. இதைப்பாடாத ஆழ்வாரோ ஆச்சர்யனோ இல்லை என்றே கூறலாம்அவைகளிருந்து  ஒரு சில பாடல்களை நாம் இன்று பார்க்கலாம்.

இந்திரியவிஷயங்கள் - முதலை , கர்ம வினையை அனுபவிக்கும் ஜீவாத்மா- யானை , சம்சாரம்- தடாகம், கர்ம வினையிலிருந்து விடுபட இறைவனின் தாள்களை அடைவதே வழி .

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. Thirukkural 350

யாதொரு பற்றுமில்லாத இறைவனைப் பற்றுக. பற்றுக்களை விடுதலுக்கு உதவியாக இறைவனைப் பற்றுக. இறைவனைப் பற்றுதல், பற்றறுத்தலுக்காகவே யாதல் வேண்டும். பிறவற்றை யாசித்துப் பெறுதலுக்காக இருத்தல் கூடாது என்பது கருத்து.

சிறிய திருமடல்திருமங்கை ஆழ்வார்

தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு
(22)

தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)

பெரியாழ்வார் திருமொழி

துப்புடையாரை அடைவது எல்லாம்*
 சோர்விடத்துத் துணை ஆவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*
 ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  
அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)

 ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

गजेन्द्ररक्षात्वरितं भवन्तं ग्राहैरिवाहं विषयैर्विकृष्टः 
 अपारविज्ञानदयानुभाव माप्तं सतामष्टभुजं प्रपद्ये Vedanta Desika
Gajendra rakshaatvaritam bhavantam graahairivaaham vishayairvikrushtah I
Apaara vigyaana dayaanu bhavam aaptam sataam ashta bhujam prapadhye II
முதலைகள் போன்ற இந்திரிய விஷயங்களால் கவரப்பட்ட அடியேன் கஜேந்திராழ்வானை காக்க விரைந்தவனாய் ,எல்லையற்ற ஞானம் ,கருணை,பெருமை உடையவனாய் ,சாதுக்களுக்கு அனுகூலனாய் எட்டு திருக்கைகளை உடையவனான உன்னை சரணம் அடைகின்றேன்.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.



No comments:

Post a Comment