மலர்: 015
अहं सर्वं करिष्यामि जाग्रत स्स्वपतश्च ते।।2.31.25।।Ramayana
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்யும்ஆதிசேஷன் கஸ்யபர் -கத்ரு தம்பதியரின் மகன். பாற்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும்.ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேஷாசலம் எனப்படுவதும் உண்டு.ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து சேவை புரிந்தவர்.
“அஹம் சர்வம் கரிஷ்யாமி”- என்று பகவானுக்கு எல்லா விதமான கைங்கர்யங்களையும் செய்வேன் என்பதின் விளக்கத்தை பொய்கை ஆழ்வார் மிக அருமையாக ஒரு பாசுரத்தில் அருளிச் செய்கிறார்:
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –பொய்கையாழ்வார்
திருவனந்தாழ்வான், பிராட்டியுடன் கூடிய பெருமாளுக்கு அவர் செல்லும்போது குடை ஆவான். அவர் இருந்தால் சிங்காசனம் ஆவான். நின்றால் அவருடைய பாதுகை ஆவான். பரந்த கடலில் படுத்துறங்கின் தெப்பம் ஆவான். மங்கள விளக்காவான், பூம்பட்டாவான், அவர் தழுவிக் கொள்ளத் தலையணையும் ஆவான் என்று அனந்தாழ்வானின் சிறப்பைக் காட்டுகிறார்.
குறிப்பிட்டு உள்ளார்:
निवास-शय्यासन-पादुकांशुको-
पधान-वर्षातप-वारणादिभिः
शरीर-भेदैस् तव शेषतां गतैर्
यथोचितं शेष इतीरिते जनैः ॥ ४६ ॥Stotra Ratna
nivasa-sayyasana-padukamsuko-
padhana-varshatapa-varanadibhih
sarira-bhedais tava seshatam gatair
yathocitam sesha itiryate janaih - Alavandar
O Lord for whose sake Ananta assumes many shapes to become Your
residence, bed, throne, sandals, garments, pillow, umbrella, parasol, and many
other objects, and in this way has become known to the people as Your sesha
(paraphernalia).

No comments:
Post a Comment