Monday, May 16, 2022

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா

 மலர்: 013

विना वेंकटेशं नाथो नाथः
सदा वेंकटेशं स्मरामि स्मरामि
There is no Lord for me other than Sri VenkatEsa . I will always remember and reflect on Him.




அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது-திருப்பாவை 28
வேதாந்த தேசிகர் தமது தயா சதகத்தில்  திருமலையை கரும்பு சாறு உறைந்து கருணையின் வடிவே ஆன ஒரு வெற்பு என்று குறிப்பிடுகிறார் ..

प्रपद्ये तं गिरिं प्रायः श्रीनिवासानुकम्पया

इक्षुसारस्रवन्त्येव यन्मूर्त्या शर्करायितम् १॥ Daya satakam-1
 மேலும் திருமலையைப்பற்றி அவர் அதிகார சங்கிரஹத்தில் ஒரு அற்புதமான பாடலை அருளி உள்ளார்.
கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு *
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு *
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்பு *
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு*
புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு*
பொன்னுலகில் போகமெல்லாம் புணர்க்கும் வெற்பு*
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு *
வேங்கட வெற்பென விளங்கும் வேத  வெற்பே *

Adikara Sangraham- Vedanta desikar

குலசேகராழ்வார் தமது பெருமாள் திருமொழியில் திருமலையில் மீனாகவோ, குருகாகவோ,மரமாகவோ, அல்லது ஏதேனும் ஆவேனே என்று மனம் உருக வேண்டுகிறார்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே-Kulasekara

(செடியாய வல்வினைகள் = செடி என்றால் பாவம் என்று ஒரு பொருள் உண்டு. செடி போன்ற, சிக்கல் நிறைந்த, ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கும் படியான வல் வினைகள்.)

இன்றும் கூட பெருமாள் கோயில் படிகளை "குலசேகரப் படி " என்று கூறும் வழக்கம் உள்ளது.

ஸ்ரீ கோவிந்த,கோவிந்த, கோவிந்தா

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment